FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, July 5, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் சூப்பர் வாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் சூப்பர் வாய்ப்பு

தமிழகத்தில் 13,357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “தமிழகத்தில் 13 ஆயிரத்து 357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களில் உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 650 மாற்றுத்திறனாளிகளும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2 ஆயிரத்து 984 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அதன்படி, இதற்கான வேட்புமனுக்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. அந்தவகையில் நகராட்சி நிர்வாக இயக்குனரகம், பேரூராட்சிகள் இயக்குனரகம், ஊரக வளர்ச்சி இயக்குனரகம் ஆகியவற்றின் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 17ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும் இந்த விண்ணப்பத்துடன், குற்ற வழக்குகளின் விவரங்கள் மற்றும் சொத்து விவரங்கள் சமர்பிக்க வேண்டும்.


No comments:

Post a Comment