FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, July 6, 2025

மாற்றுத்திறனாளிகள் ஹேப்பி!! பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு உத்தரவு..



01.07.2025 சென்னை: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு பணிகளில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான ஒரு உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.

அரசு பணிகளில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீண்ட காலமாக மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், அரசு பணிகளில் பதவி உயர்வுகளில் மொத்தமுள்ள பணியிடங்களில் 4 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு என ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கிறது. உயர்மட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 40% வரை மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு அரசு பணிகளில் வாய்ப்பு தரப்படுகிறது. இனி இவர்கள் பதவி உயர்வையும் பெற இருக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை செயலர் மதுமதி இது தொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவில், இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட திருத்தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டம் 2016ல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதன்படி பார்வையற்ற மற்றும் குறைந்த பார்வை திறன் உடையவர்களுக்கு பதவி உயர்வில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

செவித்திறன் அற்றவர்கள் மற்றும் குறைந்த அளவு ஒலியை உணரும் திறன் பெற்றவர்கள் 1 சதவீத இட ஒதுக்கீடு பெறுகின்றனர். அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் , சற்கர நாற்காலி உதவியுடன் தினசரி வாழ்வை நடத்துவர்கள் , மஸ்குலர் டிஸ்டிரோபியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது. அதே போல ஆட்டிசம், கற்றல் குறைபாடு மற்றும் மனநல பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து எந்தெந்த பதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் என அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவர் ஏற்கனவே பதவி உயர்வுக்கான தகுதிகளை பெற்று அதற்கான பட்டியலில் இடம்பெற்றிருக்கார், ஆனால் குறிப்பிட்ட அந்த வேலை மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டது இல்லை என்றால் கூட அவருக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதவி உயர்வு வழங்கும் போது மாற்றுத்திறனாளி ஊழியரின் மாற்றுத்திறன் அளவு மருத்துவ சான்றிதழ் ஆகியவை ஆய்வு செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவின் மூலம் மாற்றுத்திறன் கொண்டவர் என்பதற்காக வழங்கப்படாமல் இருந்த பதவி உயர்வுகள் அவர்களுக்கு இனி கிடைக்கும்.


No comments:

Post a Comment