27.03.2014,
குமாரபாளையத்தில் கால் விரலுக்கிடையே பேனாவைப் பிடித்து 10-ஆம் வகுப்புத் தேர்வை எழுதினார் நேரு நினைவு சம்பூரணியம்மாள் மாற்றுத் திறனாளிகள் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.மகேஷ் (15).
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் மகேஷ் பிறக்கும் போதே உடல் ஊனத்துடன் பிறந்தார். இளம் வயதிலேயே தாயை இழந்த இவர், தனது பாட்டி பார்வதியம்மாளின் அரவணைப்பில் வளர்ந்தார். இந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர் மகேஷ், ஆர்வத்துடன் கல்வி பயின்றார்.
தமிழகமெங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு புதன்கிழமை நடைபெற்ற போது, இவர் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் தமிழ்ப் பாடத் தேர்வை எழுதினார். இடது கால் பெருவிரலுக்கிடையே பேனாவைப் பிடித்து லாவகமாக எழுதத் தொடங்கினார்.
மேலும், வெள்ளைத்தாளை எடுக்கவும், பேனா மூடியைத் திறக்கவும் வளர்ச்சி குறைந்த தனது கையைப் பயன்படுத்திக் கொண்டார். விடைத்தாளைப் புரட்டவும், வினாத்தாளைப் புரட்டவும் கால்களையே உபயோகப்படுத்தினார்.
இவரது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை கூடுதலாக ஒரு மணி நேரம் விடையளிக்க கால அவகாசம் வழங்கியுள்ளது. இதேபோல, இந்தப் பள்ளியைச் சேர்ந்த இருவர் எழுதுவோர் உதவியுடன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Thanks to

No comments:
Post a Comment