FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, March 12, 2014

காதலுக்கு ஊனம் ஒரு தடையல்ல

கல்லூரி மாணவி ஒருவர் 3 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி வாலிபரை காதலித்து வெற்றிகரமாக கரம்பிடித்துள்ளார்.

ஈரோடு கிருஷ்ணம் பாளையம் சிந்தன்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( 26). மாற்றுத்திறனாளியான இவர் டிப்ளமோ கணனி
அறிவியல் முடித்து விட்டு ஆட்டோ கன்சல்டன்ட் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ தேவாலயம் மூலம் திருநெல்வேலிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது திருநெல்வேலி மாவட்டம் பணக்குடியை சேர்ந்த முனியாண்டி மகள் கனியம்மாள் (22) என்பவரை சந்தித்தார். முதல் சந்திப்பே அவர்களுக்குள் இனம்புரியாத ஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஈரோடு மாவட்டம் பல்லகவுண்டன்பாளையம் தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வந்த மாணவி கனியம்மாள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஈரோடு வந்து ஆனந்தகுமாரை பார்த்து பேசிவிட்டு செல்வார்.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து வந்தனர். இது பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் மகளை கண்டித்தனர்.

ஊனமுற்ற வாலிபரை திருமணம் செய்தால் உன்வாழ்க்கை வீணாகிவிடும் என அச்சம் தெரிவித்தனர். மேலும் மகளுக்கு பல்வேறு தடைகள் போட்டனர்.

இதனால் மனம் விரும்பியவரை மணமுடிக்க முடியாமல் போய்விடுமோ என வேதனையடைந்த கனியம்மாள் கடந்த மாதம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து அவரது தந்தை மகளின் விருப்பத்திற்கே வாழ்க்கை அமையட்டும் என விட்டுவிட்டார். ஆனால் தாயார் மகளின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் கனியம்மாள் வீட்டைவிட்டு வெளியேறி ஈரோடு வந்தார். பின்னர் இருவரும் ஈரோட்டில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஆனந்தகுமாரின் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க வினாயகர்கோவிலில் தாலிகட்டினர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

மாற்றுத்திறனாளி வாலிபரை கரம்பிடித்தது தொடர்பாக கனியம்மாள் கூறுகையில், ஊனம் ஒரு தடையல்ல. அவர் ரெம்ப நல்லவர். ஒழுக்கமானவர், என்னை காலம் முழுவதும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் மனசுக்கு பிடித்தவருடன் வாழ்வதை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனந்தகுமார் கூறுகையில், மனைவியை வேலைக்கு அனுப்பாமல் நானே வேலை செய்து காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment