தனது கால்களாலேயே செல்போன் பழுதுப் பார்க்கும் மாற்று திறனாளி முகமது அசன். |
பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்த மாற்றுத்திறனாளி, தனது கால்களாலேயே செல்போன்களை பழுது பார்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
செங்குன்றத்தை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி, சிலந்திக்குட்டையைச்
சேர்ந்தவர் முகமது அசன்.
சிறுவயதிலேயே தந்தை முகமது இறந்து விட்டார். இந்நிலையில் குடும்பத்தை அவரது அண்ணன் சாகுல் அமீதும், தாய் நபிஷாவும் கவனித்து வந்தனர்.
முகமது அசன் பிறக்கும்போதே இரு கைகள் இல்லாமல் பிறந்தார். இந்நிலையில் அண்ணன் சாகுல் அமீது டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பழுதுபார்க்கும் பணியை செய்து வந்தார்.
இந்த வருமானத்தில் குடும்பத்தையும், தம்பி முகமது அசனையும் படிக்க வைத்தார். அண்ணனின் ஆதரவில் 10-ஆம் வகுப்பு வரை அசன் படித்தார்.
குடும்ப சூழ்நிலைக் காரணமாக மேற்கொண்டு படிக்க முடியவில்லை. ஆகையால், சாகுல்அமீது கடைக்கு அசனும் சென்றுவிடுவார். அண்ணனின் ஆதரவில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை பழுது பார்க்கும் பணிகளை கற்றுக் கொண்டார். இதில் முகமது அசன் செல்போன்களை சரி செய்வதில் அதிகம் ஆர்வம் செலுத்தினார். மேலும் சிறந்து விளங்கினார். கைகள் இல்லாத நிலையிலும், கால்களில் சர்வ சாதாரணமாக செல்போன்களின் குறைகளை சரி செய்து வருகிறார்.
இது குறித்து முகமது அசன் கூறியது: தொலைக்காட்சிகளில் சூப்பர் டான்ஸர், சூப்பர் சிங்கர், சாம்பியன்ஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் பயன் அடைந்திருக்கிறார்கள். இது பாராட்டுதலுக்குரியது.
இருப்பினும், என்னை போன்ற தொழில் மட்டுமே கற்றுக் கொண்டு வேறு எதிலும் திறமை காட்ட முடியாதவர்களுக்கு, இந்த நிகழ்ச்சிகள் உதவுவது இல்லை.
எனவே, தொழில் திறமை மட்டும் வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் நடத்தி உதவ வேண்டும். செல்போன் சர்வீஸ் கடையை பெரிய அளவில் நடத்த வேண்டும்.
தனக்கு திருமணமாகி சபியா என்ற மனைவியும், 5 வயதில் அனப் என்ற மகனும் உள்ளனர் ன்றும் இவர்களின் அன்பு தனக்கு ஆறுதல் அளிக்கிறது என்றும், மேலும் இவரது நண்பர்களும், உறவினர்களும் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.
Thanks to
No comments:
Post a Comment