FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, May 14, 2019

`14 பேரும் அந்த இடத்துக்குப் போயிட்டு வந்தோம்!'- செய்திவாசிப்பாளர் விஜயா பாஸ்கரன் கண்ணீர்!

12.05.2019
நடிகை ஜோதிகாவுக்கு 'மொழி' படத்தில் சைன் லாங்குவேஜ் (காதுகேளா, வாய் பேச இயலாதவர்களுக்கான மொழி) சொல்லிக் கொடுத்தவர் விஜயா பாஸ்கரன். பல தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற பல படங்களுக்கு இது போல சைன் லாங்குவேஜ் சொல்லிக் கொடுத்திருக்கிறார். மேலும், நீதிமன்றங்களில் ஆஜராகும் காதுகேளா, வாய் பேச இயலாதவர்களின் மொழிகளுக்கு விளக்கம் கொடுப்பவர். இப்படிக் கடந்த பல வருடங்களாக இந்தப் பணிகளில் இருப்பவர், தொடர்ந்து புதிய தலைமுறை செய்தி வாசிப்பிலும் இருந்து வருகிறார் விஜயா பாஸ்கரன்.

கடந்த ஒரு வாரகாலமாக அவரை புதிய தலைமுறையில் பார்க்க முடியவில்லை. என்ன ஆச்சு என்று விசாரித்தேன்.

``தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை புதிய தலைமுறை சேனலில் ஒளிபரப்பாகும் செய்தியில் காது கேளாத வாய்பேசாதவர்களுக்காகச் செய்தி வாசிப்பாளராக இருக்கிறேன். நம்மைப் போன்ற மனிதர்கள்தான் காது கேளாத, வாய் பேச முடியாதவர்களும், நம்மைப் போன்றே நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நாட்டு, நடப்புகளைத் தெரிந்துகொள்ள ரொம்பவே ஆர்வம் காட்டுவார்கள். அவர்களுக்காகவே பிரத்யேகமாக தொலைக்காட்சியில் உருவாக்கப்பட்டது சைன் லாங்குவேஜ் நியூஸ் ரீடிங். என் சகோதரி சந்திராவால்தான் எனக்கு இந்த மொழி கைவசம் வந்தது. அவருக்கு இப்போது எழுபது வயதுக்கும் மேல் ஆகிறது. வீட்டில் அவருடன் பேசிப் பேசி எனக்கு இந்த மொழி அத்துப்படியாகிடுச்சு'' என்றவர், 

'என் சகோதரி, என் பேத்தி என குடும்பத்தாரோடு கடந்த பத்து நாள்களாக சுற்றுப்பயணத்தில் இருந்தேன். எல்லோரா, அஜந்தா என பல சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்தேன். ஒவ்வொரு வருடமும் இரண்டு முறையாவது இப்படி சுற்றுலா செல்வது வழக்கம். இந்த முறையும் அப்படித்தான் விடுமுறையில் இருக்கிறேன். நாளை முதல் என் பணியை தொடர்வேன்'' என்பவர்,

''முக்கியமாக ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆகணும். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு சில நாள்களுக்கு முன்புதான் அங்கே சென்று வந்தோம். குண்டு வெடிப்பு நடைபெற்ற தேவாலயத்துக்கும் சென்று வந்தோம். இநக்ச் செய்தியை டி.வியில் பார்த்தபோது என் சகோதரி கண்கலங்கி அழுததை என்னால் மறக்கவே முடியாது. நம்மைப் போன்று சாதாரணமானவர்களைவிட இரண்டு மடங்கு உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என் சகோதரியைப் போன்றுள்ள மாற்றுத் திறனாளிகள். செய்தியைப் பார்த்ததும், என் சகோதரி சந்திரா, ``என்னைப் போன்ற பதினான்கு பேரும் அந்த இடத்துக்கு போயிட்டு வந்தோம். இன்னும் சில நாள்கள் தள்ளிச் சென்றிருந்தால் நாம் உயிருடன் இருந்திருக்க முடியாது'' என அழுதார்.

மேலும் கூறுகையில், ``அவருடன் 14 மாற்றுத் திறனாளிகள் அந்த சுற்றுலாப் பயணத்தில் இருந்தனர். இலங்கையில் அவர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தனர். இலங்கையில் இறங்கியதும், என்னுடன் வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் உணர்ச்சிவசப்பட்டு, `மண்ணைத் தொட்டு கண்ணில் வச்சுக்கிட்டாங்க. முருகர் கோயில் உள்ளிட்டப் பல கோயில்களுக்குப் போயிருந்தோம். இலங்கையில் ராமர் வாழ்ந்தது நிஜமா என்பதை அறிந்துகொள்வதுதான் இந்த வருட இலங்கைப் பயணத்துக்கான ஏற்பாடு. ஏற்கெனவே தமிழர்கள் பலரைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கிருக்கும் உறவினர்கள் நொந்து போயிருக்காங்க. எங்களுக்கு அவர்களைப் பார்க்கவே ரொம்ப கஷ்டமாயிருக்கு. `அந்தக் கோயில், சர்ச் எப்படி ஆகிடுச்சுப் பாத்தியா'னு என் சகோதரி சந்திரா அழுதபோது தேற்றக்கூடிய வார்த்தை என்னிடம் இல்லை'' என்றார் விஜயா பாஸ்கரன்.

No comments:

Post a Comment