FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, May 21, 2019

காக்லியர் இம்பிளான்ட் சிகிச்சை: செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு எப்படி உதவுகிறது?

20.05.2019
ஒருவேளை காது கேட்காமல் போனால், காக்லியர் இம்பிளான்ட்(Cochlear implant) சிகிச்சை ஒரு தீர்வாக இருக்கலாம் என்கிறார் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற பேராசிரியர். டாக்டர். ஜே.எம்.ஹான்ஸ்.

சாதாரணமாகவே நம் காதுகள் ஒரு ஆற்றல் மாற்றி போல் செயல்படும். அவை என்ன செய்யும் என்றால், ஒலி அலைகளை உள்வாங்கி, அதை ஆற்றல் அலைகளாக மாற்றி, அதை உங்கள் மூளைக்கு செலுத்தும். அவ்வாறு செலுத்தப்படும் அலைகளை உள்வாங்கும் மூளை, அதில் உள்ள தகவல்களை புரிந்துகொண்டு, அதன்பின், அதற்கு என்ன பதிலளிக்க வேண்டும் என்ற தகவலினை வாய்க்கு அனுப்பும். இவற்றில் ஏதாவது ஒரு செயல் தடைபட்டாலும், பின் உள்ள மொத்த செயல்பாடுகளும் பாதிப்படையும், மேலும் இது நீண்ட நாட்கள் தொடர்ந்தால், பேச முடியாத நிலைக்குக்கூட ஆளாகலாம்.

எப்போதாவது, ட்ராமா, வைரல் தாக்குதல் அல்லது வேறு ஏதாவது காரணங்களால், இந்த செல்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டாலோ அல்லது செயல்பாடு நின்றுவிட்டாலோ, ஒலி அலைகளை உள்வாங்கி அதை ஆற்றல் அலைகளாக மாற்றும் செயல்பாடு நின்றுவிடும். அதனால், நமக்கு காது கேட்காமல் போய்விடும். இதற்கு என்ன தீர்வு என்று ஆராய்த்ததில் காக்லியர் இம்பிளான்ட்(Cochlear implant) சிகிச்சை ஒரு தீர்வாக இருக்கலாம் என்கிறார் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற பேராசிரியர். டாக்டர். ஜே.எம்.ஹான்ஸ். எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றுள்ள இவர் செவிமடலியல் துறையில் எம்.எஸ் பட்டம் பெற்றுள்ளார். இந்த காக்லியர் இம்பிளான்ட் சிகிச்சையில் சிறந்து விளங்கும் இவர், பல அரசு துறைகளில் பணியாற்றியுள்ளார். தற்போது, இவர் காவேரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்த சிகிச்சை பற்றி அவர் கூறும் தகவல்கள் இதோ!


கேள்வி: காக்லியர் இம்பிளான்ட் என்றால் என்ன?

டாக்டர். ஹான்ஸ் :
நமது காதுகளினுள் இருக்கும் செல்கள் ஒலி அலைகளை உள்வாங்கி, அதை ஆற்றல் அலைகளாக மாற்றி, அதை உங்கள் மூளைக்கு அனுப்பும். இந்த செல்களின் செயல் தடைபட்டால், செவித்திறன் குறையும். அப்போது, இந்த காக்லியர் இம்பிளான்ட் சிகிச்சை உங்களுக்கு உதவும். இந்த சிகிச்சையில், உங்களின் காதுகளில் ஒரு கருவி பொருத்தப்பட்டும். இரு பாகங்களை கொண்டுள்ள அந்த கருவியின் வெளிப்பாகத்தில் ஒரு மைக் மற்றும் அந்த கருவியை செயல்படுத்த உதவும் பட்டன் பொருத்தப்பட்டிருக்கும். இதில் உள்ள மைக் ஒலிகளை உள்வாங்கி, ரேடியோ சிக்னலாக மாற்றி, செவியின் உள்ளே உள்ள கருவியின் பகுதிக்கு அனுப்பும். அந்த கருவி, இந்த அலைகளை பெற்று அதை ஆற்றல் அலைகளாக மாற்றி நேரடியாக உங்கள் செவி நரம்புகளுக்கு அளிக்கும். பின் அவை மூளைக்கு செல்லும். இதனால், உங்கள் செவியின் செயல்பாடு பாதிக்கப்படாது.

மேலும் இந்த கருவியின் வெளியில், அது செயல்படுவதற்காக ஒரு பேட்டரி இருக்கும். அதுமட்டுமின்றி, ஒலி உள்ளீட்டு அளவினை கட்டுப்படுத்த ஒரு பட்டனும் இருக்கும்.

கேள்வி: இதை யாருக்கெல்லாம் பயன்படுத்தலாம்?

டாக்டர். ஹான்ஸ் :

பிறப்பின்போதே செவித்திறன் குறைபாடுள்ளவர்கள், மற்றும் இடையிலே ஏதாவது காரணங்களால் செவித்திறன் குறைபாடு ஏற்பட்டவர்கள் என அனைவருக்கும் இந்த சிகிச்சையின் மூலம் பலன் பெறலாம். உங்கள் செவிகள் செய்யும் வேலையை செவிகளில் இருந்து இந்த கருவி செய்யும்.

கேள்வி: எத்தனை வயதில் உள்ளவர்களுக்கு இந்த கருவி பொருத்தலாம்?

டாக்டர். ஹான்ஸ் :

இந்த கருவியை 8 மாத குழந்தைகளிலிருந்து அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம். குழந்தைகள் ஒருவேளை பிறக்கும்போதே, செவித்திறன் குறைபாடுடன் பிறந்தால், அந்த குழந்தை 8 மாதங்களாக இருக்கும்பொழுதே இந்த கருவியை பொருத்துவது நல்லது. இந்த கருவியை எந்த வயதில் வேண்டுமானாலும் பொருத்தலாம். ஆனால், குழந்தைகளின் வளர்ச்சி என்பது செவியில் இருந்துதான் துவங்குகிறது. குழந்தைகள், முதலில் நாம் பேசுவதை கேட்டு கேட்டு தான் பேச துவங்கும். அம்மாதிரியான நிலைமையில், குழந்தைகளுக்கு இந்த குறைபாடு இருந்தால் அவர்களுக்கு, முன்னதாகவே இந்த கருவிகளை பொருத்துவது நல்லது.

கேள்வி: இந்த சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்?

டாக்டர். ஹான்ஸ் :

இந்த சிகிச்சையின் செலவு என்பதே சற்றே அதிகம்தான். நான் ஒரு நூறு பேருக்கு இந்த சிகிச்சையை பரிந்துரைக்கிறேன் என்றால், அதில் ஒரு பத்து பேர் பட்டுமே பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள 90 பேர், இந்த சிகிச்சையின் செலவு காரணமாக இதை தவிர்க்கிறார்கள். இந்த சிகிச்சை செய்ய குறைந்த பட்சம் 5 லட்ச ரூபாய் செலவாகும் எனவும், அதிகபட்சமாக 16 லட்சங்கள் வரை செலவிட நேரிடும். இதனை ஒருமுறை மேற்கொண்டால், வாழ்நாள் வரை இதன் பலன் நீடித்திருக்கும்.

No comments:

Post a Comment