10.11.2019 ஓசூர்: ஓசூரில் நேற்று துவங்கிய, காதுகேளாதோர் பள்ளி மாணவர்களுக்கான போட்டியில், 13 மாவட்டத்தில் இருந்து, 300 பேர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட காது கேளாதோர் சங்கத்தின், 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், ஓசூர் மத்திகிரி டைட்டன் டவுன் ஷிப் பகுதியில் நேற்று துவங்கியது. சென்னை, தர்மபுரி, திருநெல்வேலி, அரியலூர், சேலம், திருப்பூர், வேலூர், விருதுநகர், திருவண்ணாமலை உட்பட மொத்தம், 13 மாவட்டங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, ஓசூர் நகர, அ.தி.மு.க., செயலாளர் நாராயணன் துவக்கி வைத்தனர். வயது அடிப்படையில், மூன்று பிரிவுகளாக மாணவ, மாணவியர் பிரிக்கப்பட்டு, ரங்கோலி, கோலம், ஓவியம், நடனம், பேஷன் ?ஷா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இன்றுடன் போட்டி நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, மாவட்ட காது கேளாதோர் அறக்கட்டளை தலைவர் சுரேஷ்பாபு, ஒருங்கிணைப்பு தலைவர் பலராமன், செயலாளர் ஜெய்சங்கர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment