13.11.2019
கோவை:கோவை மாநகராட்சியில், காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு, அனைத்து ஜாதியினரும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோவை நகர் பகுதியில், ஐந்து லட்சம் கட்டடங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. குப்பை சேகரிக்க, 250 வீடுகளுக்கு ஒருவர், தள்ளுவண்டி தள்ள ஒருவர், மழை நீர் வடிகால் துார்வார ஒருவர் என, மூன்று பேர் நியமிக்க வேண்டும்.இதன்படி, 6,000 துப்புரவு தொழிலாளர்கள் தேவை. நிரந்தர தொழிலாளர்களாக, 2,520, ஒப்பந்த தொழிலாளர்களாக, 2,308 பேர் உள்ளனர்.அதனால், காலியாக உள்ள, 549 துப்புரவு தொழிலாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது.தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். 'கமிஷனர், கோயம்புத்துார் மாநகராட்சி, பிரதான அலுவலகம், பெரிய கடை வீதி, கோயம்புத்துார்-641001' என்ற முகவரிக்கு, வரும், 15ம் தேதிக்குள் தபாலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினர் மட்டுமின்றி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம், மாற்றுத்திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர், காது கேளாதோர், கண் பார்வையற்றோர்) மற்றும் பொதுப்போட்டி ஆகிய பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணம் இல்லாவிட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும், என, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment