காஞ்சீபுரம், அக். 24–
மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாடு அடைவதற்காக மானிய உதவியுடன் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க முன்தொகையாக செலுத்த வேண்டிய ரூ.25 ஆயிரம், ஆவின் பொருள்கள் கொள்முதல் செய்ய மானியமாக ரூ.25 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.50 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆவின் பாலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்து அதன் விவரத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விருப்பமுள்ளோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், ஜி.எஸ்.டி. ரோடு, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டம் (தொலைபேசி எண்: 044-27431853) என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
தனியார் தொழில் வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள், மென்பொருள் நிறுவனங்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க முன்னுரிமை அடிப்படையில் இடவசதி அளித்து அவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய உதவலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment