FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Wednesday, January 27, 2021

மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி அதிகாரிகள் தகவல்

 



தலையில் கரகம் வைத்து நாற்று நட்ட வாய் பேச முடியாத , காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவி

17.01.2021
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன்-மாலா தம்பதியரின் மகள் கிருஷ்ணவேணி (வயது 15). வாய் பேச முடியாத , காது கேளாத மாற்றுத்திறன் மாணவியான இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள காது கேளாதோர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் விவசாயத்தை காக்கவேண்டும், கரகாட்டம் உள்ளிட்ட கலைகளை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தி தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண்டே வயலில் இறங்கி நாற்றுநடும் பணியில் ஈடுபட்டார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கரகாட்டம் ஆடிக்கொண்டே மாணவி கிருஷ்ணவேணி நாற்று நட்டதை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

மாணவியின் தாய் மாலா கூறுகையில், விவசாயத்தை காக்கவும் கரகாட்டம் உள்ளிட்ட கலைகளை வளர்க்கவும் வலியுறுத்தி கிருஷ்ணவேணி நாற்று நடும் பணியை மேற்கொண்டார். மேலும் இந்தியா புக்ஆப் ரெக்கார்டு பெறவும் இந்த முயற்சி செய்து வருகிறோம் என்றார்.



Thursday, January 14, 2021

பீகாரில் வாய் பேச முடியாத சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் - அடையாளம் காட்டாமல் இருக்க கண்களை சிதைத்த கொடூரம்

13.01.2021
மதுபானி:
பீகாரின் மதுபானி மாவட்டத்தில் காவாகா பார்கி கிராமத்தை சேர்ந்த ஒரு 15 வயது சிறுமி, காதுகேளாத வாய்பேச முடியாத பாதிப்பு கொண்டவர். சம்பவத்தன்று அந்த சிறுமி தங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறத்திற்கு அழைத்து சென்றாா். அவருடன் வேறுசில சிறுவர்களும் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் அவளை தூக்கிச்சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த காம கொடூரர்கள், சிறுமி தங்களை அடையாளம் காட்டிவிடக்கூடாது என்பதற்காக, சிறுமியின் கண்களை கூரிய ஆயுதத்தால் சேதப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அவளுடன் சென்ற சிறுவர்களில் ஒருவர் சிறுமியின் வீட்டிற்கு வந்து தகவல் கூறியதாக தெரிகிறது. உடனே அவளது பெற்றோர் பதறியடித்து சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர்.

வாய் பேச முடியாத சிறுமியை 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவளது கண்ணை சேதப்படுத்தியதால் இந்த சதிச்செயலில் ஈடுபட்டவர்களை சிறுமியால் அடையாளம் காட்ட முடியவில்லை. அவளது பார்வைத்திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டதா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. அவள் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.



Thursday, January 7, 2021

காதுகேளாத வாய்பேச முடியாத மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், உடைந்த கால்களோடு வாழ்க்கை நடத்தும் குடும்பத் தலைவன் அரசுக்கு வேதனையுடன் கோரிக்கை

01.01.2021
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும் 3வயதில் லோகேஷ் என்ற மகனும், 2 வயதில் சாதனா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், ராதாகிருஷ்ணன் கடந்த 2015ஆம் ஆண்டு வேலைக்காக மலேசியாவிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு நிகழ்த்த விபத்தில் அவரது கால் எலும்புகள் 3 துண்டுகளாக உடைந்து பாதிக்கப்பட்டார். பின்னர் ஊர் திரும்பிய அவர், சித்தேரி கிராமத்தில் பெட்டிக் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

இதையடுத்து ராதாகிருஷ்ணனுக்கு கால் உடைந்திருப்பதால் பிற கடினமான வேலைக்குச் செல்ல அவரால் முடியவில்லை. இந்த நிலையில் கிராம பகுதியில் இவர் நடத்திவரும் பெட்டிக்கடை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்.


எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை அரசு தனக்கும் வழங்க வேண்டும் என்றும், அரசு வேலை கிடைத்தால் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் வாய்பேச முடியாத, காது கேளாத தனது மனைவியை கவனித்து கொள்ளவும், தனது குடும்ப முன்னேற்றத்திற்கு பேருதவியாக இருக்கும் என்றும் ராதாகிருஷ்ணன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



வாய் பேச இயலாத 4 வயது சிறுமியை பாலியல் சித்திரவதை செய்த 51 வயது காமுகனுக்குச் சாகும் வரை சிறை!

01.01.2021
கோவையில் 4 வயதாகும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த 51வயது நபருக்கு வாழ்நாள் முழுதும் ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.

3 மாதங்களாகக் குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்த நேரத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்ததாகப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையம் குறிப்பிட்ட வழக்கைப் பதிவு செய்திருந்தது.

வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை கேகே புதூர் பகுதியைச் சேர்ந்த பாலன்(51) என்பவருக்கு வாழ்நாள் முழுதும் ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

இதுபோக, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு போக்சோ நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.



மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் போன்கள் பெற விண்ணப்பிக்கலாம்

06.01.2021 திருவள்ளூர்: 
திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட காது கேளாத மற்றும் வாய்பேசாத, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படவுள்ளது. ஸ்மார்ட் போன்கள் கல்வி பயிபவர்கள் மற்றும் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. எனவே, திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த காது கேளாத மற்றும் வாய்பேசாத, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் சைஸ் புகைப்படம், கல்வி பயிலும், பணிபுரியும், சுயதொழில் புரிவதற்கான சான்று ஆகிய ஆவணங்களுடன் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.


1,000 ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி - கலெக்டர் அலுவலகத்தில் மனு

தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு பழைய 1,000 ரூபாய் நோட்டுகளுடன் வந்த நாகராஜ்.

தேனி:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவர் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் தனது மனைவி பஞ்சவர்ணத்துடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அப்போது அவர் தனது கையில் 7 பழைய 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்தார். இதுகுறித்து பஞ்சவர்ணத்திடம் கேட்டபோது, "எனது கணவருக்கு மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர உதவித்தொகை வரும். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனக்கு வந்த உதவித்தொகை பணத்தை எனக்கே தெரியாமல் வீட்டில் சேமித்து வைத்திருந்தார். காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதோடு அவருக்கு எழுதப்படிக்க தெரியாது. பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அவருக்கு தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் என்னிடம் இந்த பணத்தை காண்பித்தார். அது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இப்போது இந்த பணத்தை எப்படி மாற்றுவது என்று எங்களுக்கு தெரியவில்லை. அதனால், கலெக்டரிடம் உதவி கேட்டு மனு அளிக்க வந்துள்ளோம். இந்த பணத்தை மாற்றிக் கொடுத்தால் எங்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும்" என்றார். பின்னர், அவர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் கோரிக்கை மனு அளித்தார்.


தனது உருவத்தை ஓவியமாக தீட்டிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பிரதமர் மோடி கடிதம்

07.01.2021
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் வந்தனா (வயது 23). இவர் பிறப்பிலேயே வாய் பேச முடியாத, காது கேளாத பெண் ஆவார். ஒரு பயிற்சி நிலையத்தில் ஓவியம் கற்று வருகிறார். தீபாவளியையொட்டி, அவர் பிரதமர் மோடியின் உருவத்தை ‘ரங்கோலி’ வகை ஓவியமாக தீட்டி, அதை பிரதமருக்கு அனுப்பி வைத்தார். இந்த ஓவியம், பலரது பாராட்டுகளை பெற்றது. இந்தநிலையில், வந்தனாவை பாராட்டி அவருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வாழ்க்கையில் முட்டுக்கட்டைகளும், சவால்களும் வரலாம். ஆனால், எதிர்மறையான சூழ்நிலையில் கூட மனம் தளராமல், உறுதியுடன் போராடினால், அதுதான் உண்மையான வெற்றி ஆகும். தங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். கல்வியிலும், ஓவியத்திலும் புதிய உயரத்தை எட்டுவீர்கள்.


பார்வையற்ற, காது கேளாத 7,813 பேருக்கு 'ஸ்மார்ட் போன்'

06.01.2021
திருப்பூர்:தமிழகத்தில் பார்வையற்ற, காது கேளாத, 7,813 மாற்று திறனாளிகளுக்கு, இலவச 'ஸ்மார்ட் போன்' வழங்கப்படுகிறது.
தமிழக அரசு, பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், நவீன, 'ஸ்மார்ட் போன்' வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது.'பிரெய்லி' உள்ளிட்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட, 12 ஆயிரத்து 799 ரூபாய் மதிப்புள்ள, இந்த போன், இலவசமாக வழங்கப்படுகிறது. பார்வையற்ற 3,907 பேர் மற்றும் காது கேளாத 3,906 பேருக்கு, இது வழங்கப்படும்; பயனாளிகள் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் கூறுகையில், 'சென்னைக்கு, 222; தேனி, நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கு தலா 220; மற்ற மாவட்டங்களுக்கு, தலா 210 பயனாளிகள் வீதம், 'ஸ்மார்ட்' போன்' ஒதுக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற, காது கேளாத மாணவ, மாணவியர், சுயதொழில் மற்றும் தனியார் வேலைக்கு செல்வோர் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்' என்றனர்.