திருப்பூர்:தமிழகத்தில் பார்வையற்ற, காது கேளாத, 7,813 மாற்று திறனாளிகளுக்கு, இலவச 'ஸ்மார்ட் போன்' வழங்கப்படுகிறது.
தமிழக அரசு, பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், நவீன, 'ஸ்மார்ட் போன்' வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது.'பிரெய்லி' உள்ளிட்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட, 12 ஆயிரத்து 799 ரூபாய் மதிப்புள்ள, இந்த போன், இலவசமாக வழங்கப்படுகிறது. பார்வையற்ற 3,907 பேர் மற்றும் காது கேளாத 3,906 பேருக்கு, இது வழங்கப்படும்; பயனாளிகள் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் கூறுகையில், 'சென்னைக்கு, 222; தேனி, நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கு தலா 220; மற்ற மாவட்டங்களுக்கு, தலா 210 பயனாளிகள் வீதம், 'ஸ்மார்ட்' போன்' ஒதுக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற, காது கேளாத மாணவ, மாணவியர், சுயதொழில் மற்றும் தனியார் வேலைக்கு செல்வோர் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்' என்றனர்.
No comments:
Post a Comment