11.06.2014, புதுடில்லி: மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு, மாற்றுத்திறனாளி குழந்தை இருந்தால், அந்தக் குழந்தைக்காக அவர், அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவரை இடமாற்றம் செய்தால், குழந்தையின் மறுவாழ்வு நடவடிக்கைகள் பாதிக்கும். மாற்றுத்திறனாளி குழந்தைகளை கவனிக்க, அதிக செலவாகும். அத்தகைய ஊழியர்களுக்கு, வழக்கமான இடமாற்றத்தில் இருந்து விதி விலக்கு அளிக்கலாம். அவர்கள் இடமாற்றத்தை ஏற்க மறுத்தால், அவர்களிடம் தானாக முன்வந்து பதவி விலகி விடும்படி கேட்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, மத்திய பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
Wednesday, June 11, 2014
கோர்ட்டில் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் கதறல்: பார்வையாளர்கள் கண்ணீர்
10.06.2014, பொள்ளாச்சி : குரூர கணவனின் கொடுமைகளை அனுபவித்து வாழ்க்கையை தொலைத்த, மாற்றுத் திறனாளி பெண் ஒருவர், பொள்ளாச்சி கோர்ட்டில் அளித்த விளக்கம், பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது.
பொள்ளாச்சி மீன்கரை ரோடு கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் அப்துல் ரகீம். இவரது மகள் சகிலா பானு,35. இவர் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரை அப்துல் ரகீமின் சகோதரி மகன் அன்வர் பாட்சாவுக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர். அன்வர் பாட்சா ஊட்டியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர்களுக்கு ஏழு மற்றும் ஐந்து வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் பிறந்தவுடன் அன்வர் பாட்சா, சகிலா பானுவை மிருகத்தனமாக அடித்து உதைத்து கொடுமைப்படுத்த துவங்கியுள்ளார். சீதனமாக கொடுக்கப்பட்ட 15 பவுன் தங்க நகையையும் விற்று செலவழித்துள்ளார். சரியாக வீட்டிற்கு வராமலும், குடும்பம் நடத்த பணம் கொடுக்காமலும், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டும் பல வகைகளில் முறை தவறிய வாழ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.ஒரு கட்டத்தில் தன் மகள் படும் பாட்டை காண சகிக்காத அப்துல் ரகீம், அவரை தன்னுடன் பொள்ளாச்சிக்கு அழைத்து வந்துவிட்டார்.
இது குறித்து கடந்த ஆண்டு சகிலா பானு சமூகநலத்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை பொள்ளாச்சி ஜே.எம்.,1 கேர்ட்டில் நடந்தது. மனைவியை நல்லபடியாக வைத்து பார்த்துக்கொள்ள, அன்வர் பாட்சாவை கோர்ட் அறிவுறுத்தியது. ஆனால் அன்வர் பாட்சா தன் மனைவியுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை. இதையடுத்து அவரிடம் ஜீவனாம்சமும், சீதனமாக அளித்த 15 நகையையும் திருப்பி தரக்கேட்டு, சகிலா பானு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாய்பேச முடியாத சகிலா பானு தரப்பின் கருத்தை கேட்டறிய, கோவை ஆர்.எஸ்.,புரம் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் பள்ளி ஆசிரியை ஜோஸ்பின் லாரன்ஸ் மேரி உதவிக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
நீதிமன்ற விசாரணையின் போது, தான் அனுபவித்த சித்ரவதைகளையும், குழந்தைகளை வளர்க்க படும் சிரமங்களையும் அவர் சைகையில் சொல்ல சொல்ல, அது ஆசிரியையால் மொழி பெயர்த்து சொல்லப்பட்டது. இதை கண்ட பார்வையாளர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கண்கலங்கினர்.
இவ்விசாரணைக்கு சகிலா பானுவின் கணவர் அன்வர் பாட்சா நேற்று வரவில்லை. வழக்கின் தீர்ப்பு இன்றைக்கு (10ம் தேதி) ஒத்தி வைக்கப்பட்டது.வயதான பெற்றோர் மற்றும் விவரம் அறியா குழந்தைகளுடன் வாழ்வை எதிர்கொள்ளப்போராடும், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

You can find detailed information on this job opportunity
Work with Us!
Closing Date - Monday, 16 June 2014
WFD is seeking a Development Officer join the WFD Secretariat in Helsinki, Finland.
You can find detailed information on this job opportunity below.
http://wfdeaf.org/wp-content/uploads/2014/05/WFD-Job-advertisment-for-WFD-Development-Officer-21-may-2014.pdf

Monday, June 9, 2014
சுய தொழில் துவங்க கடன் வேண்டுமா?
09.06.2014, திருப்பூர் :
சுய தொழில் துவங்க, வங்கி கடன் பெற, யு.ஒய்.இ.ஜி.பி., திட்டத்தில் விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், தமிழக அரசு யு.ஒய்.இ.ஜி.பி., திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சம் 5 லட்சம்; சேவை தொழிலுக்கு 3 லட்சம் மற்றும் வியாபார தொழிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்.
குறைந்த பட்சம் 8ம் வகுப்பு முடித்த, 18 வயது பூர்த்தியான தனி நபர் விண்ணப்பிக்கலாம். வயது தகுதி - பொதுப்பிரிவினர் 35; சிறப்பு பிரிவு, எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,

Sunday, June 8, 2014
உணவுப் பொருள்களை தயாரிக்க சிறப்புப் பயிற்சி
சென்னை, 08 June 2014
சென்னை கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையத்தில் ஜூன் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை உணவுப் பொருள்களையும் சிறு ரசாயனப் பொருள்களையும் தயாரிப்பதற்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அந்நிலையத்தின் கூடுதல் ஆலோசகர் எஸ்.சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உணவுப் பொருள் தாயரிப்பு பயிற்சி ஜூன் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். பயிற்சியில் துரித உணவுப் பொருள்கள், ஊறுகாய், மசாலா பொருள்கள், பதப்படுத்தப்பட்ட பழம் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் செய்யும் முறைகள் மற்றும் தரக்கட்டுப்பாடு பற்றிய விவரங்கள் அளிக்கப்படுகின்றன.
இதேபோல், மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரை கிளீனிங் பவுடர், சோப்பு ஆயில், மெழுவர்த்தி, கற்பூரம், சொட்டு நீலம் உள்ளிட்ட பொருள்களைத் தயார் செய்யும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இரண்டு பயிற்சிகளுக்கும் கட்டணம் ரூ. 3000.
மேலும், இப்பயிற்சியில் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், திட்ட அறிக்கை தயார் செய்யும் முறைகள், வங்கி கடன் பற்றிய விவரங்கள், விற்பனை வாய்ப்புகள் பற்றிய விவரங்கள் ஆகியவையும் அளிக்கப்படும்.
பயிற்சியில், 18 வயது நிரம்பிய ஆண்கள் மற்றும் பெண்கள் சேரலாம். எஸ்.சி,எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பயிற்சி கட்டணத்தில் 50 சதவீத சலுகை உண்டு. பயிற்சியின் இறுதியில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 99403 18891, 97907 54446 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, June 6, 2014
54 மாணவர்கள் வாழ்வில் 'ஒளி'
05.06.2014, கொட்டாம்பட்டி :
கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளில் உள்ள 233 கிராமங்களில் பள்ளி செல்லாத, இடை நின்ற மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் கண்டறியும் முகாம் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 2 மாதங்கள் நடந்த முகாமில், இடைநின்ற 32 மாணவர்கள் மற்றும் 22 மாற்றுத் திறனாளி மாணவர்கள் புதிதாக கண்டறியப்பட்டு அவரவர் வயதுக்கேற்ற வகுப்புகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இப்பகுதியில் பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்து 04544- - 230 210ல் தெரிவிக்கலாம்.

Sunday, June 1, 2014
ஆதிதிராவிட மாணவர்களைப்போல தனியார் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் மாற்றுதிறனாளி மாணவர்களின் கல்வி கட்டணங்களை அரசே ஏற்க கோரிக்கை
* Such a scheme there for SC/ST Students with the support of Center Govt Fund
* Also demand to provide scholarships to children with disabled parents
Click here
Click here
Subscribe to:
Posts (Atom)

.jpg)