Monday, July 28, 2014
Friday, July 25, 2014
மாற்று திறனாளிகள் பள்ளிகளில் விரைவில் சத்துணவு திட்டம்: முதல்வர் அறிவிப்பு
25.07.2014 சென்னை:
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகளுக்கும் சத்துணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று, பேரவை விதி 110ன் கீழ் வெளியிட்ட அறிக்கை:
மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் தற்போது 11 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 21 மாவட்டங்களிலும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் அமைக்கப்படும். இதற்கென அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 92 லட்சத்து 10,800 கூடுதல் செலவு ஏற்படும்.
தமிழ்நாட்டில் 14 வயதிற்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோருக்கான தங்கும் வசதி, உணவு மற்றும் தொழிற் பயிற்சியுடன் கூடிய 31 இல்லங்கள், 21 மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இல்லங்களை தருமபுரி, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஆண்களுக்கும், விருதுநகர், அரியலூர், திருப்பூர், நீலகிரி மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் பெண்களுக்கும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், அரசுக்கு ரூ.1 கோடியே 6 லட்சத்து 34,800 செலவு ஏற்படும்.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ், செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில், விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.650 வீதம் உணவூட்டுச் செலவினம் வழங்கப்படுகிறது. இச்சிறப்புப் பள்ளிகளில், தற்போது மதிய உணவு வழங்கப்படுவதில்லை. எனவே, இந்த பள்ளிகளுக்கும் சத்துணவு திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம், சுமார் 1,733 மாணவ, மாணவியர் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.38 லட்சத்து 99,250 கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-Tamil Murasu

Wednesday, July 23, 2014
ஒரே மாதிரியான உதவித்தொகை வழங்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
23.07.2014, நாடு முழுவதும் ஒரே மாதிரியான உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதை வ-யுறுத்தி திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தபால் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தலைமை தாங்கியது.
மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரி செலுத்துவதில் முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Monday, July 21, 2014
ஆந்திராவில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை தாக்கிய ஆசிரியர்
21.07.2014
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை, பள்ளி ஆசிரியர் ஒருவர் மிகவும் கொடூரமாக தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. மனதை பதைபதைக்கச் செய்யும் இந்த சம்பவம், காக்கிநாடாவிலுள்ள தனியாருக்குச் சொந்தமான பார்வையற்றோர் பள்ளியில் நிகழ்ந்துள்ளது. மாணவர்களை கடுமையாகவும் சரமாரியாகவும் பிரம்பால் அடிக்கும் நபர், அந்த பள்ளியின் முதல்வரும் ஆசிரியருமான ஸ்ரீநிவாஸ் என்பது தெரியவந்துள்ளது. மாணவர்கள் கெஞ்சியும், மனம் இறங்காத அந்த ஆசிரியர், கதறி அழுத மாணவர்களை தனது ஆத்திரம் தீர அடித்துள்ளார். மாணவர்களை அடிப்பதற்கு பள்ளியின் செயலாளர் கே.வி.ராவ் உதவுவதும் வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது. 2 தினங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பான காட்சிகள், இன்று தொலைக்காட்சிகளில் வெளியானது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாஸ், அவருக்கு உதவிய கே.வி.ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியை ஆய்வுசெய்த கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர், பள்ளியை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார். மாணவர்களை பள்ளி முதல்வர் கொடூரமாக தாக்கியது தொடர்பான விசாரணை நடத்த வருவாய் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை இரக்கமின்றி தாக்கிய அந்த தனியார் பள்ளியின் முதல்வர் ஸ்ரீநிவாசும் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மனம் இறங்காத அந்த ஆசிரியர், கதறி அழுத மாணவர்களை தனது ஆத்திரம் தீர அடித்துள்ளார். மாணவர்களை அடிப்பதற்கு பள்ளியின் செயலாளர் கே.வி.ராவ் உதவுவதும் வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது. 2 தினங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பான காட்சிகள், இன்று தொலைக்காட்சிகளில் வெளியானது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாஸ், அவருக்கு உதவிய கே.வி.ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியை ஆய்வுசெய்த கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர், பள்ளியை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார். மாணவர்களை பள்ளி முதல்வர் கொடூரமாக தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த வருவாய் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை இரக்கமின்றி தாக்கிய அந்த தனியார் பள்ளியின் முதல்வர் ஸ்ரீநிவாசும் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, July 17, 2014
காது கேளாத, பேச முடியாதோர் சிறப்பு பள்ளியான கதை
”மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்” வாழ்ந்த ராமாவரம் தோட்டம்..
காது கேளாத, பேச முடியாதோர் சிறப்பு பள்ளியான கதை
--------------------------------------------------------------------------------------
" அமெரிக்காவில் சிகிச்சை முடிச்சு வந்தப்போ சரியாப் பேச முடியாத காரணத்தினால... அதிகமாக தனிமையை நாடினார்.
அந்த நாட்களில் திடீர் திடீர்னு படுக்கையைவிட்டு எழுந்து... என்னை, இல்லேன்னா மாணிக்கத்தை (எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டு இன்று ஜானகி அம்மாளுடன் இருக்கும் ஒரே பழைய மனிதர்) அழைச்சு, கையைப் பிடிச்சுக்கிட்டு தோட்டத்தைச் சுத்திச் சுத்தி வந்து பெருமூச்சுவிடுவார்.
அப்போ ஒருநாள், இங்க வேலை பார்த்துட்டு இருந்த ஒரு பெரியவரோட மகள், தன் எட்டு வயசுப் பேத்தியைக் கூட்டிட்டுத் தோட்டத்துக்கு வந்திருந்தா. அந்தப் பேத்தி வாய் பேச முடியாத பொண்ணு. முறையா டாக்டர்கிட்ட காண்பிக்காம - காண்பிக்க வசதி இல்லாமதான் இந்த நிலைமைக்கு ஆளாயிருக்குன்னு சொல்லி அந்தப் பெரியவர் அழுததைக் கேட்டார்.
உடனே தனக்கு ட்ரீட்மென்ட் தந்துட்டு இருந்த டாக்டர்களைக் கூப்பிட்டு, அந்தப் பொண்ணுக் கும் சிகிச்சை செய்யச் சொன்னார். ஆச்சர்யப் படற அளவுல அந்தப் பொண்ணுக்கு எட்டாவது வாரமே ஓரளவு பேச வந்திட்டுது. அன்னிக்கு அவர் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
அதுல இருந்தே அவர் கொஞ்சம் மனசு லேசான உணர்வுல இருந்தார்னு சொல்லலாம். அப்போ தான் சொத்துக்கள் பத்தி இப்படி ஒரு நல்ல முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். இந்த ஏழரை ஏக்கர் நிலத்துல இந்த வீடு இருக்கிற இடம் போக, மீதி இருக்கிற எல்லா இடத்தையும், வாய் பேச இயலாத, காது கேட்கும் திறன் குறைஞ்ச குழந்தைகளுக்கான ஸ்கூல் ஆரம்பிச்சு நடத்தணும்னு உயில்ல எழுதிவெச்சிட்டாரு.
அப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளியையும் இதுல சேர்ந்து படிக்கிற பிள்ளைகளையும் பார்க்கிறப்போ, என் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குது.''
(1993-ம் ஆண்டில் தமிழ் வார
இதழ் ஒன்றுக்கு அமரர் எம்.ஜி.ஆரின் மனைவி, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜானகி
அம்மையார் அளித்த
பேட்டி )
Thursday, July 10, 2014
அம்ருதா ப்ரியதர்ஷினி பாலனோ கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாத மாற்றுத்திறனாளி!
கரை தெரிகிறது... பாய்மரம்
அவிழ்க்கப்பட்ட இரண்டு
சிறு கப்பல்கள் அலைகளில் ஏறி, கடலில் மிதந்தபடி செல்கின்றன...
ஏசுநாதர், தன் சீடர்களுடன் கடைசி விருந்தில் அர்த்தம் பொதிந்த அமைதியோடு
அமர்ந்திருக்கிறார்...
விதைகளும் சதைப்பற்றும்
பளிச்சிட மஞ்சள் பூசணி
துண்டு ஒன்று தரையில்
கிடத்தப்பட்டிருக்கிறது...
அத்தனையும் தத்ரூபமான
உயிர்ப்புள்ள ஓவியங்கள்...
பேசும் ஓவியங்கள்.
இவற்றை வரைந்த அம்ருதா ப்ரியதர்ஷினி பாலனோ கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாத மாற்றுத்திறனாளி!
சென்னை, கிண்டியில் உள்ள அம்ருதாவின் வீட்டுக்குப் போனபோது, கண்ணன், ராதையுடன் காதல் வயப்படும் காட்சியை வரைந்து கொண்டிருந்தார். நம்மை மலர்ந்து வரவேற்று, சைகையாலும் எழுதியும் கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் அதே முறையில் பதில்களை படபடவென சொல்கிறார் அம்ருதா. ‘‘பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். அப்பா பாலன் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் டாக்டர். அம்மா பெட்ஸி பாலன் ஹோம் மேக்கர்.
சமூக விஷயங்கள்ல ஆர்வமாக ஈடுபடறவங்க. நான் ரெண்டாவது பொண்ணு. என் கூடப் பிறந்த ரெண்டு பேரும் நார்மலாத்தான் இருக்காங்க. அம்மா, அப்பா முகம் கண்டு சிரிக்க ஆரம்பிச்ச நேரம்... ஒருநாள் வீட்டுல பாத்திரங்கள்
Subscribe to:
Posts (Atom)

.jpg)