FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, July 10, 2014

அம்ருதா ப்ரியதர்ஷினி பாலனோ கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாத மாற்றுத்திறனாளி!


கரை தெரிகிறது... பாய்மரம்
அவிழ்க்கப்பட்ட இரண்டு
சிறு கப்பல்கள் அலைகளில் ஏறி, கடலில் மிதந்தபடி செல்கின்றன...
ஏசுநாதர், தன் சீடர்களுடன் கடைசி விருந்தில் அர்த்தம் பொதிந்த அமைதியோடு
அமர்ந்திருக்கிறார்...
விதைகளும் சதைப்பற்றும்
பளிச்சிட மஞ்சள் பூசணி
துண்டு ஒன்று தரையில்
கிடத்தப்பட்டிருக்கிறது...
அத்தனையும் தத்ரூபமான
உயிர்ப்புள்ள ஓவியங்கள்...
பேசும் ஓவியங்கள்.

இவற்றை வரைந்த அம்ருதா ப்ரியதர்ஷினி பாலனோ கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாத மாற்றுத்திறனாளி!

சென்னை, கிண்டியில் உள்ள அம்ருதாவின் வீட்டுக்குப் போனபோது, கண்ணன், ராதையுடன் காதல் வயப்படும் காட்சியை வரைந்து கொண்டிருந்தார். நம்மை மலர்ந்து வரவேற்று, சைகையாலும் எழுதியும் கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் அதே முறையில் பதில்களை படபடவென சொல்கிறார் அம்ருதா. ‘‘பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். அப்பா பாலன் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் டாக்டர். அம்மா பெட்ஸி பாலன் ஹோம் மேக்கர்.

சமூக விஷயங்கள்ல ஆர்வமாக ஈடுபடறவங்க. நான் ரெண்டாவது பொண்ணு. என் கூடப் பிறந்த ரெண்டு பேரும் நார்மலாத்தான் இருக்காங்க. அம்மா, அப்பா முகம் கண்டு சிரிக்க ஆரம்பிச்ச நேரம்... ஒருநாள் வீட்டுல பாத்திரங்கள்
எல்லாம் உருண்டு விழுந்திருக்கு... அவ்வளவு பெரிய சத்தத்துல நான் எந்த அசைவையும் காட்டாம அப்படியே இருந்திருக்கேன். அதைப் பாட்டி பார்த்துட்டாங்க. பயந்து போய், பாட்டியும் அம்மாவும் என்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போயிருக்காங்க. ‘கொஞ்சம் லேட் ஆகிடுச்சு, இனிமே எதுவும் பண்ண முடியாது’ன்னு கையை விரிச்சுட்டாங்களாம்.

அதுக்கப்புறம் மற்ற குழந்தைகளுக்கான வழக்கமான வாழ்க்கை எனக்கு கிடைக்கல. ஆனாலும், என் உலகம் சந்தோஷமானது தான். குறையை நினைச்சு கவலைப்படாம நிறைய விஷயங்களை தேடித் தேடி கத்துக்க ஆரம்பிச்சேன். லிட்டில் ஃபிளவர் பள்ளியில ஆரம்பக் கல்வி சேர்ந்தேன். மற்ற குழந்தைகளைப் போல வழக்கமான பள்ளியில படிக்கணும்னு எனக்கு ஆசை. அதை அம்மாகிட்ட சொன்னேன். அவங்க யோசிக்கவே இல்லை... வித்யோதயா ஸ்கூல்ல சேர்த்துவிட்டாங்க.

சாதாரண குழந்தைங்க மாதிரியே நானும் படிக்க ஆரம்பிச்சேன்...’’ - அம்ருதாவின் கண்கள் படபடக்கின்றன. சின்னஞ்சிறு வயதில் எத்தனையோ சிகிச்சைகள்... காக்ளியர் டிரான்ஸ்பிளான்ட் செய்தும் கூட பலன் இல்லை. டாக்டராக இருந்தும் மகளின் குறையை சரியான நேரத்தில் கவனித்து, தீர்வு காண முடியவில்லையே என்கிற வருத்தம் அப்பாவுக்கு இருந்திருக்கிறது. அந்தக் கவலைகளை தன் அபாரமான செயல்களால் விரட்டியடித்திருக்கிறார் அம்ருதா.

10ம் வகுப்பில் 86 சதவிகித மதிப்பெண்கள், பிளஸ் டூவில் 90 சதவிகிதம். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் விஷுவல் ஆர்ட்ஸ் கோர்ஸ் சேர்ந்தார். அப்போது தான் அம்ருதாவுக்கு ஓவிய ஈர்ப்பு அதிகமாகியிருக்கிறது. சிறு ஓவியங்களை பார்த்துப் பார்த்து வரைய ஆரம்பித்தபோதே நல்ல வரவேற்பு கிடைத்தது. அவ்வளவுதான்... ஓவியம்தான் எதிர்காலம் என்று தீர்மானித்துவிட்டார் அம்ருதா!

ஓவியத் தேடல் தொடரத் தொடர, அம்ருதாவுக்கு புதிய உலகம் வசப்பட ஆரம்பித்தது. பைபிள் கதாபாத்திரங்களை வரைய ஆரம்பித்தார். அது இவருடைய சிறப்புத் தன்மை என்கிற புகழையும் சர்வசாதாரணமாக தட்டிக் கொண்டு போக ஆரம்பித்தார். மொஹல், ராஜஸ்தானி ஓவியங்கள், 16ம் நூற்றாண்டு பாணி, சுடுமண் சிற்பம் போன்றவற்றையும் கற்றுத் தேர்ந்தவர் அம்ருதா. ‘‘ஓவியம் ஒரு பெரிய வரம். அதை நான் அனுபவத்துல உணர்ந்திருக்கேன். அக்ரிலிக் பெயின்டிங்ல ஆரம்பிச்சு போட்டோஷாப், இன்டிசைன், கிராஃபிக்ஸ் உள்பட நிறைய கத்துக்கிட்டேன்.

கல்லூரி அளவில் நிறைய போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசுகள் வாங்கியிருக்கேன். ஆனாலும், என்னோட ஓவியங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகணும்னு நினைச்சேன். ரொம்ப யோசிச்சி, பைபிள் பாத்திரங்களை ஓவியங்களா வரையும் முயற்சி யில் இறங்கினேன். வீட்டுக்குப் பக்கத்துலயே சர்ச் இருக்கு. அங்கே இந்த ஓவியங்களைக் காட்டினேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. இன்னும் தீவிரமா அந்த வேலைல ஈடுபட்டேன். உழைச்சதுக்கும் திறமைக்கும் பலன் கிடைச்சது. கார்ப்பரேட் கம்பெனிகள் ஆர்டர்களை மொத்தமா கொடுக்க ஆரம்பிச்சாங்க...’’- சிரிக்கிறார் அம்ருதா.

No comments:

Post a Comment