நெல்லை கே.டி சி நகரை சேர்ந்த காதுகேளாத,வாய்பேச முடியாத விக்னேஷ்வரி-மாரீஸ்வரன் தம்பதியினர் சிரமப்பட்டனர். விக்னேஷ்வரியின் தந்தை செங்கோட்டையில் உயிரிழந்த நிலையில் ஆன்லைனில் விண்ணப்பித்து இறப்பு சான்றிதழ் கிடைக்காமல் ஆன்லைன் விண்ணப்பம் மூன்று முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்தும் அனுமதி கிடைக்காமல் கண்ணீருடன் ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால் காத்திருந்த தம்பதிகளை அங்கு பணியிலிருந்து காவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பயிற்சி ஆட்சியரிடம் அழைத்து சென்று நடந்ததை சொல்லி அரசு செலவில் வாகனம் ஏற்பாடு செய்து ஈமசடங்கிற்கு அனுப்பி வைத்தனர்
Saturday, May 9, 2020
வாய்பேச முடியாதோருக்கு பிரத்யேக முகக்கவசம்... திருச்சியை சேர்ந்த இளம் மருத்துவரின் புதிய முயற்சி
09.05.2020
திருச்சி: வாய்பேச முடியாதோர் மற்றும் காதுகேளாதோர் தங்கள் உணர்வை வாய் சைகை மூலம் பிறருக்கு தெரியப்படுத்தும் வகையில் அவர்களுக்காக பிரத்யேக முககவசத்தை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இளம் மருத்துவர் ஒருவர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்தவர் மருத்துவர் ஹக்கீம். எம்.பி.பி.எஸ். முடித்துள்ள இவர் தற்போது திருச்சியில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாய்பேச முடியாதோர் மற்றும் காதுகேளாதோருக்காக மனிதநேய அடிப்படையில் பிரத்யேக முகக்கவசத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வாய்பேச முடியாதோர் முகக்கவசம் அணிந்துகொண்டால் சைகை மூலம் அவர்கள் கூற வருவதை பிறரால் எளிதாக புரிந்துகொள்ள முடியாது. இதற்காக இப்போது உள்ள சூழலில் வாய்பேச முடியாதோர் முகக்கவசம் அணியாமலும் இருக்க முடியாது. கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவரும் முககவசம் அணிவது அவசியம் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இதனைக் கருத்தில்கொண்ட மருத்துவர் ஹக்கீம், என்.95 மாஸ்கில் உள்ள சில பகுதியை நீக்கிவிட்டு அதற்கு பதில் லேடிக்ஸ் 3 காகிதத்தை (latex 3 paper) இணைத்துள்ளார். இதன் மூலம் வாய்பேச முடியாதோரின் சைகைகளையும், வாய் அசைவுகளையும் மூலம் எளிய முறையில் பிறர் புரிந்துகொள்ள முடியும். நல்ல செய்தி.. கொரோனா இறப்பு விகிதம்.. தமிழகத்தில் மிக மிக குறைவு.. எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா? இது தொடர்பாக நம்மிடம் பேசிய மருத்துவர் ஹக்கீம், லேடிக்ஸ் 3 காகிதத்தை பொறுத்தவரை மூச்சுவிடுவதற்கு எந்த சிரமும் இருக்காது என்றும், மற்ற ஜரிகைகள், பிளாஸ்டிக் பைகளை போன்று லேடிக்ஸ் 3 காகிதத்தில் fog படியாது எனவும் தெரிவித்தார். முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையில் இந்த முயற்சியில் தாம் இறங்கியுள்ளதாகவும், இதற்கான அனுமதி கிடைத்தவுடன் பிரத்யேக முறையில் 1,000 முககவசம் தயாரித்து அதனை வாய்பேச முடியாதோர் மற்றும் செவிதிறனற்றோருக்கு இலவசமாக கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். இதனிடையே இந்த இளம் மருத்துவர் ஹக்கீமின் தந்தை பிரபல நரம்பியல் நிபுணர் அலீம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீனாகவும் இருந்திருக்கிறார்.
காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது
07.05.2020
விழுப்புரம்; விழுப்புரம், மந்தக்கரை, புதுத்தெருவில் உள்ள செயின்ட் ஜான் மாற்றுத் திறனாளிகள் நல மேல்நிலைப் பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை சேர்க்கை நடக்கிறது.தமிழக அரசின் அனுமதி பெற்ற இந்த பள்ளியில், கை, கால் ஊனம், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் ஆகிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், விழுப்புரம், மாம்பழபட்டு ரோடு, இந்திரா நகரில் ஆதரவற்ற சிறுவர்கள் காப்பகம் நடக்கிறது.இங்கு, நரிக்குறவர்கள் பிள்ளைகள், கல் அறுக்கும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பிள்ளைகள், தாய், தகப்பனை இழந்த பிள்ளைகள், பெற்றோர் இருந்தும் படிக்க வைக்க முடியாதோர் பிள்ளைகள் ஆகிய மாணவர்களுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.கல்வி, உணவு, தங்குமிடம், புத்தகம், சீருடைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவுப்படி, மாற்றுத் திறனாளிகள் நல மேல்நிலை பள்ளி ஆதரவற்ற சிறுவர்கள் விடுதி திறக்க எந்த தடையும் இல்லை. கடந்த ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.விண்ணப்பம் பெற வருவோரை போலீஸ் எந்த தடையும் இல்லாமல் அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம், ஜெயராஜ், 23, எப், ரஹிம் லே-அவுட், பழைய பஸ் நிலையம் பின்புறம், விழுப்புரம் என்ற முகவரியில் பெறலாம்.இது சம்பந்தமான விபரங்கள் தேவைப்படுவோர் மொபைல் 9443879401, தொலைபேசி 04146 224417 ஆகிய எண்களிலும், இணையதளம் www.amtti.org. www.stjohnsociety.org தெரிந்து கொள்ளலாம்.
Wednesday, April 22, 2020
Monday, April 6, 2020
கொரோனா அச்சுறுத்தல்: அவசர உதவி எண்ணுடன் மாற்று திறனாளிகளுக்கான கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு..!
வீடியோ கால் மூலமாக அழைப்பவர்கள் 9700799993 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மற்ற மாற்றுத்திறனாளின் நண்பர்கள் டோல் ஃப்ரீ எண்ணான 18004250111 எண்ணிற்கும் அழைக்கலாம்.
தமிழகத்தில் அவசர உதவி எண்ணுடன் மாற்று திறனாளிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு அறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைப் போல தங்களை முழுமையாக தனிமைப்படுத்த முடியாது, ஏனென்றால் அன்றாட சுய பாதுகாப்பு பணிகளைச் செய்ய அவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து வழக்கமான உதவி தேவைப்படுகிறது.
மேலும், மளிகைப் பொருள்களை வைப்பது சில ஊனமுற்றோருக்குச் செய்வது கடினம். மேலும் அவர்கள் போக்குவரத்துக்கு மற்றவர்களை நம்பியிருக்கிறார்கள்.
இவ்வாறு இருக்கக்கூடிய நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா தொற்றுநோய் பரவுதலில் இருந்து தப்பித்துக் கொள்ள அனைவரும் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இது இயல்பான மனிதர்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் என்ன செய்ய முடியும்? கைகளை எங்கும் தொடாதீர்கள், பிறருக்கு கை கொடுக்காதீர்கள் என கூறும் நிலையில் அவர்களுக்கு கைகள் தான் கண்களுக்கு மாற்றாக செயல்படுகின்றன.
இதற்காக சென்னை கே கே நகரில் மாற்று திறனாளிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு அறை அவசர உதவி எண்ணுடன் அமைக்கப்பட்டுள்ளது. வாய் பேச முடியாத காது கேளாதோர் அந்த கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தால் அவர்களுக்கு பதில் சொல்ல sign language interpretor இருக்கின்றனர்.மேலும் வீடியோ கால் மூலமாக அழைப்பவர்களுக்கு ஊரடங்கு நேரத்தில் என்னென்ன அரசு அறிவிப்புகள், கொரோனா விழிப்புணர்வு செய்தி போன்றவை sign language interpretor ரூத் எபினேசன் பதில் அளிக்கிறார். இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு அறை 24மணி நேரமும் பயன்பாட்டில் உள்ளது.

தினமும் 1000-1500 தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அதில் 50-70 அழைப்புகள் வாய் பேச முடியாத காது கேளாதோர்களாக இருக்கின்றனர். மேலும் கண் தெரியாதவர்களுக்கு அவர்களுக்கு உதவி புரிபவர்களாக இருப்பவர்கள் வீடியோகால் மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களிடம் கேட்டு அறிந்து அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையர் ஜானிடாம் அனைத்து மாற்றுத்திறனாளி அமைப்புகளும் தங்களுக்கென்று அவசரகால குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு அதை தங்களது உறுப்பினர்கள் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் அவசர உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு
05.04.2020
புதுச்சேரி; மாற்றுத்திறனாளிகள் அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சமூக நலத்துறை இயக்குநர் அசோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு கோவிட் -19 சூழ்நிலை காரணமாக மாற்றுத்திறனாளிகளின் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் அவசர கால உதவி தேவைப்பட்டால், 94430 80954, 97916 31555, 94434 88322 மற்றும் 94422 79550 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.இதர மாற்றுத்திறனாளிகள் தங்களின் அவசர கால உதவிக்கு 96002 19478 மற்றும் 94439 59800 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரியும் அரசு சாரா தொண்டு நிறுவனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரியும் தனிநபர்களுக்கு உள்ளூர் இயக்கத்திற்கான அனுமதி சீட்டு பெற http://forms.gle/kk4b8MQCgbZAUKbc8 என்ற இணைப்பிணை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 75983 89108, 82484 53481 ஆகிய மொபைல் எணகளில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Saturday, December 21, 2019
வாய்பேச இயலாதவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தால் தான் செல்லும்
12.12.2019
மதுரை: 'கொலை வழக்கில் வாய்பேச இயலாதோர் சாட்சியத்தை நீதிமன்றத்தில் அளித்தால்தான் செல்லும். போலீசில் அளிப்பது ஏற்புடையதல்ல. கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், ஒருவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.புதுக்கோட்டை கணேஷ் நகர் ஜெரின் (எ) திவான். இவர் ஒரு பெண்ணை காதலித்தார். அவரை 2014 ல் வலுக்கட்டாயமாக ஜெரின் அழைத்துச் செல்ல முயன்ற போது ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டப்பட்டு பலியானார். மேதா திவான் உட்பட சிலர் மீது கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்தனர். மேதா திவானுக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு:பெண்ணின் சகோதரர் வாய் பேச முடியாதவர்; செவித்திறன் குன்றியவர். அவரது சாட்சியத்தை சைகை மொழியில் வாய்பேச இயலாதோர் மற்றும் மற்றும் செவித்திறன் குன்றியோருக்கான புதுக்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உதவியுடன்போலீசார்பதிவு செய்துள்ளனர். இது இந்திய சாட்சிய சட்டப்படி ஏற்புடையதல்ல.சாட்சிய சட்டப்படி வாய்பேச இயலாதோரின் சாட்சியத்தை எழுத்து அல்லது சைகை மொழியில் நீதிமன்றத்தில்தான் அவசியம் பதிவு செய்ய வேண்டும். போலீசார் தேர்வு செய்யும் இடத்தில் சாட்சியம் அளிக்க முடியாது என இந்நீதிமன்றம் கருதுகிறது.உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய போலீசார் தவறிவிட்டனர். சாட்சிகளில் பலர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். சந்தேகத்திற்கு இடமின்றி மனுதாரர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை. மனுதாரருக்கு தண்டனை விதித்த கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றனர்.குழந்தைகளுக்கு செவித்திறன் சிகிச்சைக்கான மருத்துவமனை: நிதி திரட்ட விழிப்புணா்வு ஆட்டோ பேரணி
11.12.2019
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் இருந்து குஜராத் வரை செல்லும் ஆட்டோ விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 6 வயதுக்குள் அறுவைச் சிகிச்சையும், பிறகு தொடா் சிகிச்சையும் அவசியம். இதற்காக குஜராத் மாநிலம், புணே அருகே மருத்துவமனை அமைக்கப்படுகிறது.
இந்த மருத்துவமனையில் பொதுமக்களின் பங்களிப்பு இருக்கும் வகையில், நிதி திரட்டுவதற்காக கன்னியாகுமரி முதல் குஜராத் வரை விழிப்புணா்வு ஆட்டோ பேரணி நடத்த சக்சம் அமைப்பு முடிவு செய்தது. இதன்படி, ஆட்டோ விழிப்புணா்வு பேரணி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் தொடங்கியது. பேரணியை குமரி மாவட்டம் வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமத் தலைவா் சைதன்யானந்தஜி மகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு, கா்நாடகம், கோவா, மகாராஷ்டிரம் வழியாக வரும் 21 ஆம் தேதி குஜராத்தில் பேரணி நிறைவடைகிறது. 30 ஆட்டோக்கள் பங்கேற்கும் இந்தப் பேரணியில் இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த 26 பெண்கள் உள்பட சுமாா் 90 போ் பங்கேற்கின்றனா்.
பேரணி தொடக்க நிகழ்வில், மாற்றுத் திறனாளிகளுக்கான சக்சம் அமைப்பின் தேசிய இணைச் செயலா் கோவிந்தராஜ், சேவா இண்டா்நேஷனல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வெல்ஜிபாய், கன்னியாகுமரி நகர ஆா்.எஸ்.எஸ். பொறுப்பாளா் பி. முருகன், குமரி சிவசேனை தலைவா் சி.எஸ். சுபாஷ், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Subscribe to:
Posts (Atom)