FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, October 30, 2019

சிவகங்கையில் மூன்று ஆண்டுகளில் காது கேளாத 50 பேருக்கு அறுவை சிகிச்சை

20.10.2019
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பிறவி காது கேளாத 50 குழந்தைகளுக்கு நத்தைச்சுருள் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தில் பிறவி காது கேளாத குழந்தைகளுக்கு நத்தைச்சுருள் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 50 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நேற்று 50 வது அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையொட்டி சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கிற்கு டீன் குழந்தைவேலு தலைமை வகித்தார். இ.என்.டி., துறைத்தலைவர் டாக்டர் நாகசுப்ரமணியன் வரவேற்றார். மெட்ராஸ் இ.என்.டி., ஆராய்ச்சி பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், உதவிப்பேராசிரியர் யோகநாத், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஷீலா, பேராசிரியர் அழகு வடிவேல் நிலைய மருத்துவ அலுவலர்கள் டாக்டர் மீனா, டாக்டர் மிதின் குமார் பங்கேற்றனர்.50 அறுவை சிகிச்சையின் போது சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

டீன் குழந்தைவேலு கூறியதாவது: தமிழகத்திலேயே குறைந்த வயதாக, ஒரு வயது 7 நாட்கள் கொண்ட குழந்தைக்கு இங்கு தான் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இங்கு பிறவி செவிதிறன் குறைபாடு குழந்தைகளை கண்டறிய நவீன பரிசோதனை கருவிகளும், அதற்கான சிறப்பு அறையும் உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒன்றரை வருடம் சிறப்பு பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக இங்கு தான் இச்சிகிச்சை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது, என்றார். தொடர்ந்து 50 வது அறுவை சிகிச்சை நினைவாக கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

No comments:

Post a Comment