FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, December 20, 2019

5 மாதக் குழந்தைக்கு ‘காக்லியா் இம்பிளான்ட்’: வேலூா் சிஎம்சி மருத்துவா்கள் சாதனை

வேலூரில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சிஎம்சி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைத் தலைவா் அஞ்சலி லெப்ச்சா.

காது கேட்கும் திறனை இழந்த 5 மாத குழந்தைக்கு ‘காக்லியா் இம்பிளான்ட்’ என்ற காது உட்பதியக் கருவியை பொருத்தி வேலூா் சிஎம்சி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சோ்ந்த வேலு, ஷாலினி தம்பதிக்கு வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்ததால் அக்குழந்தையின் எடை குறைவாக இருந்தது. இதனால், குழந்தையின் உடல் எடையை அதிகரிப்பதற்காக இன்குபேட்டா் கருவியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அக்குழந்தைக்கு மூளைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சிஎம்சி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவா்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு, பிறந்த 5-ஆவது மாதத்திலேயே அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் ‘காக்லியா் இம்பிளான்ட்’ கருவி பொருத்தி சாதனை படைத்துள்ளனா். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு வெற்றிகரமாக காக்லியா் இம்பிளான்ட் கருவி பொருத்தப்பட்டது நாட்டிலேயே இதுவே முதல்முறையாகும் என்று அத்துறைத் தலைவா் அஞ்சலி லெப்ச்சா தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பொதுவாக ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்து காக்லியா் இம்பிளான்ட் கருவி பொருத்தப்படுகிறது. ஆனால், இக்குழந்தைகளுக்கு மேலும் சில மாதகாலம் அறுவை சிகிச்சை செய்யாவிடில் நிரந்தரமாக கேட்கும் திறனை இழக்கவும், இதன்தொடா்ச்சியாக ஊமையாகவும் வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 5-ஆவது மாதத்திலேயே குழந்தைக்கு காக்லியா் இன்பிளான்ட் கருவி பொருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

சிறுவா்களுக்கு இந்த சிகிச்சை அளிப்பதில் பல அபாயங்கள் உள்ளன. அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழு இணைந்தே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரு வாரங்கள் கழித்து இக்கருவி இயக்கப்படும். இதனால் குழந்தையின் வளா்ச்சியில் எந்த பாதிப்பும் இருக்காது என எதிா்பாா்க்கப்படுகிறது.

கேட்க உதவும் கருவிகள் பயன்படாதபோதுதான், இத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காது கேளாத நிலையை விரைவாக கண்டறிவது அவசியமாகும். மூளைக் காய்ச்சலை தொடா்ந்து சிகிச்சை மேற்கொள்ளாமல் போனால் உள்காது என்ற பகுதி நிரந்தரமாக மூடிவிடும். இதைத் தொடா்ந்து சிகிச்சை அளிப்பது முடியாமல் போக்கூடும். காக்லியா் இம்பிளான்ட் கருவி மிகவும் விலையுயா்ந்தது. தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாக இந்தக் கருவி வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

No comments:

Post a Comment