FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, December 20, 2019

இந்த குழந்தைக்கு முதல்முறையா காது கேட்குது- துள்ளல் சந்தோஷத்தை பாருங்க!

10.12.2019
காது கேளாத ஒரு குழந்தைக்கு காது கேட்பதற்கான இயந்திரம் பொருத்தப்படுகிறது. தன் அம்மா பேசுகிறாள். இந்த உலகில் அந்த பச்சிளம் பெண் குழந்தை கேட்கும ஒலி தன் அம்மாவினுடையது. எப்படி இருக்கும்… மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது குழந்தை.

ஜியார்ஜினா என்னும் பெயருடைய அந்த குழந்தையின் அப்பா ஹாரோகேட், தன் ட்விட்டர் பக்கத்தில், “இன்று காலை எங்கள் மகளின் காது கேட்கும் இயந்திரத்தை ஆன் செய்தபோது,” என்று பதிவிட்டு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தன் அம்மா லூசி பேசுவதை கேட்கும் ஜியார்ஜினா, எழுப்பும் சத்தம், இசைபோல எங்கும் நிறைக்கிறது.

தி டெலிகிராஃப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்படி, ஜியார்ஜினாவுக்கு இரண்டு காதுகளும் கேட்காது என்று கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து அந்த குழந்தைக்கு, காது கேட்பதற்கான இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துதான் தன் மகள், சத்தம் கேட்கும் போது எப்படி ரியாக்ட் செய்கிறாள் என்பதை ஜியார்ஜினாவின் தந்தை பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் தளத்தில் மட்டும் ஜியார்ஜினாவின் வீடியோவுக்கு 7 லட்சம் வியூஸ். பலரும் அந்த வீடியோவைப் பார்த்து நெகிழ்ந்து போயுள்ளனர்.

“காது கேட்கும் இயந்திரத்தைப் பொருத்தினால், ஒரு லைட் பல்பு ஆன் செய்யப்பட்டதுபோல இருக்கிறது அவளுக்கு. மிகுந்த ஆச்சரியமாக உள்ளது.

இந்த இயந்திரத்தினால் என் மகள் துடிப்பாக, மகிழ்ச்சியாக, தாயின் குரலைக் கேட்பவளாக இருக்கிறாள்.

இப்படி இயந்திரம் பொருத்தப்படுவதால் ஜியார்ஜினா மிகவும் மகிழ்ச்சியாகவும் உயிரோட்டமுடனும் மாறுகிறாள்,” என்கிறார் ஜியார்ஜினாவின் தந்தை ஆடிசன் ஆனந்தம் ததும்ப.




No comments:

Post a Comment