FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, December 21, 2019

உ.பியில் கொடூரம்! காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத தாயின் முன்னே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி

09.12.2019
காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத தாயின் முன்னாலே, சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

வீட்டில் இருந்த பதின் வயது சிறுமியை ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தந்தை வேலைக்காக வெளியே சென்று விட, காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுமியின் தாயார் மொட்டை மாடியில் இருந்துள்ளார். இந்நிலையில், லக்னோவைச் சேர்ந்த சர்வேஷ் ராவத் என்பவர், வீட்டிற்குள் புகுந்து சிறுமியை அடித்து துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதற்கிடையே, சிறுமியின் தாய் இதைப்பார்த்து மகளை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால், ராவத் அவரையும் அடித்து தள்ளிவிட்டுள்ளார். அவர், மகளைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை.

இதன்பின்னர் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், சர்வேஷ் மீது காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சர்வேஷ் ராவத்(32). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி விஷம் அருந்தி தற்கொலைக்கும் முயன்றுள்ளார். தொடர்ந்து அவர் தற்போது, கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment