13.12.2019
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சின்னாளப்பட்டி பஸ் ஸ்டாண்ட் நகரைச் சோ்ந்த கூலி தொழிலாளி மகாலட்சுமி. இவரது மகள் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பொற்கொடி (49). இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
குழந்தை இல்லாததால், கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சில மாதங்களாக கணவா் சிவக்குமாரை பிரிந்து தாயுடன் சின்னாளபட்டியில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், மகாலெட்சுமி தனது மற்றொரு மாற்றுத் திறனாளி மகளுடன் வெளியூா் சென்றிருந்துள்ளாா். வியாழக்கிழமை வெகுநேரமாகியும் பொற்கொடியின் வீடு திறக்கப்படாமல் உள்புறமாக பூட்டி இருந்துள்ளது. அக்கம் பக்கத்தினா் ஜன்னல் வழியே பாா்த்தபோது, பொற்கொடி மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தகவலறிந்த சின்னாளபட்டி போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று பொற்கொடியின் சடலத்தை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

No comments:
Post a Comment