FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, February 7, 2022

காதுகேளாத வாய் பேச இயலாத மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை


04.02.2022
ஆசை பட பாணியில் மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் நடந்துள்ளது இந்த சோக சம்பவம்.

கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த தம்பதி முகமது சலீம்- சோபியா. இவர்களுக்குப் பிறந்த மகன் பிறவியிலேயே வாய் பேச முடியாமலும் காது கேட்க முடியாமலும் இருந்துள்ளார் . பல முயற்சிகள் செய்தும் இந்த குறையை குணப்படுத்த முடியவில்லை.

இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் இப்படிப்பட்ட மகனை பார்த்துக்கொண்டிருக்க மனது இல்லாததால் மகனை கொன்று விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று பெற்றோர் முடிவெடுத்துள்ளனர் .

அதன்படி, முகமது சலீம் தனது மகனை பாலிதீன் கவரை எடுத்து, அதைத் தனது மகனின் முகத்தை முழுவதுமாக மூடி கட்டியிருக்கிறார். இதில் மூச்சுத்திணறி மகன் உயிரிழந்திருக்கிறார். அதன்பின்னர் தம்பதிகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சம்பவம் குறித்து அறிந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். வாய் பேச முடியாத காது கேளாத எத்தனையோ பேர் வாழ்ந்து வரும் போது தங்கள் மகன் அப்படி இருப்பது அந்தப் பெற்றோர்கள் தாங்கிக்கொள்ள முடியாமல் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது கோவில்பதாகை பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.




No comments:

Post a Comment