பிறவியில் காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு காக்ளியர் இன்பிளான்டேஷன் என்கிற நுண் அறுவை சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது என்று மருத்துவமனை இணை பேராசிரியர் சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காதுகேட்காத, வாய்பேச முடியாத 75 குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் இதுவரை காக்ளியர் இன்பிளான்டேஷன் நுண் அறுவை சிகிச்சை மூலம் காது கேட்கவும், பேசவும் வைக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சத்திற்கு மேல் செலவாகும் இந்த நவீன சிகிச்சை, அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது.
திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா தலைமையில் 75-வது குழந்தைக்கு பொருத்தப்பட்ட காக்ளியர் எந்திரம் நேற்று செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த எந்திரம் பொருத்திய பிறகு குழந்தைகளுக்கு பேசும் பயிற்சி அளிக்கப்படுகிறது. திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment