FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, May 16, 2025

மாற்றுத்திறனாளி சிறுமி கொலை ஐந்து தனிப்படைகள் அமைப்பு



16.5.2025
ராம்நகர்: மாற்றுத்திறனாளி சிறுமியை கொன்றவர்களை கைது செய்து, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ராம்நகர் பிடதி அருகே பத்ராபுரா கிராமத்தில் உள்ள ஹக்கிபிக்கி காலனியில் வசித்தவர் குஷி, 14. காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த 11ம் தேதி மாலையில் இருந்து மாயமானார். மறுநாள் காலையில் பத்ராபுரா கிராமம் வழியாக செல்லும், ரயில் தண்டவாளத்தின் அருகில் உள்ள, பள்ளத்தில் இறந்து கிடந்தார்.

அவரது தலையில் இரும்பு கம்பியால் அடித்த காயம் இருந்தது. பலாத்காரம் செய்து, குஷியை மர்மநபர்கள் கொன்றதாக, அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

துணை முதல்வர் சிவகுமார் நேற்று முன்தினம், குஷி குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார். முதலில் கொலையாளிகளை கைது செய்ய 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

குஷி இறந்து கிடந்த இடத்தில் இருந்து சில பொருட்களை, தடய அறிவியல் ஆய்வக ஊழியர்கள் எடுத்து சென்று உள்ளனர். அறிக்கை வெளியான பின்னரே, உண்மை தெரியவரும் என, ராம்நகர் மாவட்ட எஸ்.பி., சீனிவாஸ் கவுடா கூறி உள்ளார்.


No comments:

Post a Comment