FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, May 19, 2025

மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் தவறான தகவல் என எஸ்.பி., உறுதி

18.05.2025
ராம்நகர்: ''உயிரிழந்த மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை,'' என, ராம்நகர் எஸ்.பி., சீனிவாஸ் கவுடா உறுதி செய்துள்ளார்.

ராம்நகர் பிடதி அருகே பத்ராபுரா கிராமத்தில் உள்ள பழங்குடியினர் காலனியில் வசித்தவர் குஷி, 14. காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த 12ம் தேதி பத்ராபுரா கிராமம் வழியாக செல்லும், ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள குழியில் இறந்து கிடந்தார்.

அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. குஷியை யாரோ பலாத்காரம் செய்து கொன்றதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். இதனால் சிறுமியின் உடலில் இருந்து 32 மாதிரிகள் எடுக்கப்பட்டு தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

துணை முதல்வர் சிவகுமார், மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி ஆகியோர், குஷியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் ராம்நகர் மாவட்ட எஸ்.பி., சீனிவாஸ் கவுடா நேற்று அளித்த பேட்டி:

பத்ராபுரா கிராமத்தில் உயிரிழந்த சிறுமி குஷி, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று, அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர். தற்போது தடய அறிவியல் ஆய்வக அறிக்கை, எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில் பலாத்காரம் எதுவும் நடக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமியின் தலையின் காயத்திற்கான அறிகுறி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் எப்படி காயம் ஏற்பட்டது என்பது தெரியவரும். சிறுமி இறந்தது பற்றி சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல் பரப்புகின்றனர். அவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம். இந்த வழக்கில் 10 பேரிடம் விசாரித்தோம். யாரையும் கைது செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment