FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, May 22, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் இலகுவாக அணுகக்கூடிய தேர்தலுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது


21.05.2025 
இந்திய தேர்தல் ஆணையம் மாற்றுத்திறனாளிகள் இலகுவாக தேர்தலை அணுகிட மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக கண்காணிப்பு குழுக்கள் அமைத்து காலாண்டு தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியலில் தற்போது வரை உள்ள 14,243 மாற்றுத்திறனாளிகள் உள்ளது. இவர்கள் இலகுவாக அணுகக்கூடிய தேர்தலுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காணிப்பு குழுவானது மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், வாக்குச்சாவடி வாரியான அவர்களின் வாக்குப் பதிவை உறுதி செய்தல், மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் புதுப்பிக்கப்பட்ட தரவை மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வகை உட்பட பராமரித்தல் வேண்டும். வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை எளிதாக்குதலை உறுதி செய்ய வேண்டும். எளிதில் அணுகக்கூடிய வாக்குச் சாவடி மற்றும் எளிதில் அணுகக்கூடிய வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து, வாக்குகளை பதிவு செய்வதற்கு தடையற்ற சூழலை உருவாக்குதல் வேண்டும். தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிறப்பித்த பல்வேறு வழிமுறைகளை செயல்படுத்தி தேர்தல் செயல்பாட்டில் மாற்றுத்திறனாளிகளின் திறமையான மற்றும் பயனுள்ள பங்கேற்பை உறுதி செய்தல் வேண்டும். தேர்தல் பணியாளர்களுக்கான அனைத்து பயிற்சிகளிலும் மாற்றுத்திறனாளிகளின் சிறப்புத் தேவைகள் குறித்த விவரங்களை சேர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை மற்றும் அவர்களுடைய வாக்கை பதிவு செய்வதற்கான விழிப்புணர்வுக்காக சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கென சக்ஸாம் (Saksham) என்ற மொபைல் செயலியை பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது. இச்செயலியில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்தல், பதிவை இடமாற்றம் செய்ய மற்றும் திருத்தம் செய்தல், மாற்றுத் திறன் வகையை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தல், குரல் ஒலி உதவி, காது கேட்கும் திறன் குறைபாடுள்ளோர்க்கான- எழுத்திலிருந்து குரல் ஒலியாக மாற்றும் உதவி (Text to Speech), பெரிய அளவிலான எழுத்து- வண்ணம் கொண்ட பதிவுகள், வாக்குச் சாவடியின் அமைவிடம், வாக்குச் சாவடியில் அமைந்துள்ள வசதிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களின் தொடர்பு எண்கள், தேர்தல் செயல்பாடுகள் குறித்த புகார்கள் பதிவு செய்தல் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, மாற்றுத்திறனாளிகள் இலகுவாக தேர்தலை அணுகுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி கலைச்செல்வி, தேர்தல் வட்டாட்சியர் செல்வராஜ் ஆகியோர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment