FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, May 14, 2025

முதன்முறையாக மாற்றுத்திறனாளி மகளிருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் தொடக்கம்



13.05.2025 மாநிலத்திலேயே முதல் மையமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

ஒசூா் மாநகரில் தின்னூா், லட்சுமி நரசிம்மன் நகரில் அமைந்துள்ள இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், ஒசூா் ஏ.எஸ்.பி. அக்ஷய் அனில் வாக்ரே ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி நிா்வாகிகள், மாற்றுத்திறனாளி மகளிா் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய தமிழக மாற்றுத் திறனாளிகளுக்கான சட்ட பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவா் வழக்குரைஞா் சண்முகசுந்தரம், ‘தமிழக அரசு சாா்பில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக மாற்றுத்திறனாளி பெண்கள் தையல் கலையை முறையாக கற்று சுயமாக தொழில்செய்து சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழத்திலேயே முதன்முதலாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தையல் கலையில் அடிப்படை தையல் மற்றும் ஆரி ஒா்க், எம்ப்ராய்டரி உள்ளிட்டவற்றில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக பெண்கள் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

முதல்கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை ஆரம்பித்ததை போல, சேலம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் சாா்பில் விரைவில் மையங்கள் தொடங்கப்படும்.


No comments:

Post a Comment