FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, January 24, 2026

இந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை திமுக ஆட்சி செய்திருக்கிறது மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும்: பார்வை, செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



22.01.2026 
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளியின் (லிட்டில் பிளவர் கான்வென்ட்) நூற்றாண்டு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: லிட்டில் பிளவர் கான்வென்ட்டுக்கும், எனக்கும் ஒரு நீண்ட நெடிய, ஆழமான உறவு இருக்கிறது. ஒருவேளை, நீங்களே அழைக்க மறந்தாலும், நான் உரிமையோடு வந்து உங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பேன்.

ஒருமுறை இந்த பள்ளிக்கு பிறந்தநாள் கொண்டாட வந்தபோது, பெனோ ஜெபின் என்கிற மாணவியை நான் சந்தித்தேன். ‘அமெரிக்காவில் நடைபெறும் இளந்தலைவர்கள் மாநாட்டிற்கு நான் தேர்வாகியிருக்கிறேன் - நீங்கள் அமெரிக்கா செல்வதற்கு எனக்கு உதவி செய்ய வேண்டும்’என்று ஒரு கடிதத்தை வழங்கினார். அப்போது திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

கலைஞர் முதலமைச்சர் - நான் உடனே அந்த கடிதத்தை பெற்றுக் கொண்டு, தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அவரிடத்தில் எடுத்துச் சொல்லி, ஒரு சிறப்பு நேர்வாக, அந்த மாணவிக்காக நிதி விடுவித்து, அமெரிக்கா செல்ல உதவினோம். பின்னாளில், ஒரு பெரிய சாதனையை படைத்திருந்தார். இந்தியாவிலேயே, ஐ.எப்.எஸ்.ஆக தேர்வான முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி உங்கள் பள்ளியில் படித்த சீனியர்தான். மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகையை நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இருமடங்காக உயர்த்தி அறிவித்திருக்கிறோம்.

பி.எச்.டி படிக்கும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை அறிவித்திருக்கிறோம். நீங்கள், போட்டி தேர்வுகளில் வெற்றி பெற உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்கப்படுகிறது. நம்முடைய அரசு தரும் ஆதரவால், பாராலிம்பிக்ஸ், ஆசிய விளையாட்டு போட்டிகள் என்று பல உலகத் தொடர்களிலும் தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் சாதனை மேல் சாதனை படைத்துகொண்டு இருக்கிறார்கள்.

அண்மையில் கூட, தமிழ்நாட்டில் உள்ள 13 ஆயிரத்திற்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் இடம்பெற இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றி, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செய்யாத சாதனையை நம்முடைய ஆட்சி செய்திருக்கிறது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியின் எம்எல்ஏ எழிலன், மகளிர் ஆணைய தலைவர் குமரி மற்றும் அன்பகம் கலை, அன்பு துரை, வி.எஸ்.ராஜ், ஆயிரம் விளக்கு தொகுதி நிர்வாகிகள், சிறுமலர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் முதன்மை அருட்சகோதரி சவேரியா, முதன்மை அருட்சகோதரி ரோஸ்லைன், தாளாளர் ஜெம்மா, பள்ளி முதல்வர் பெர்பைன், தலைமை ஆசிரியை நிர்மலா ராணி மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.




Hearing-impaired teacher sets up school for hearing-impaired kids in rural Odisha


17.01.2026
Bhubaneswar: For children with hearing disabilities, schooling can be an uphill battle, especially when classrooms are not designed for them. At home, many grow up without any exposure to sign language, leading to delays in linguistic and cognitive development.

Growing up in a remote village in Subarnapur district, hearing-impaired Sibaji Panda understood this reality all too well. Despite going on to earn a masters degree from the University of New England and a PhD in special education, Panda carried with him a deeply personal mission to build a school for hearing-impaired learners led by hearing-impaired educators.

A decade ago, Panda quit his job as a senior lecturer at the University of Central Lancashire in the UK and returned to his village, Lakhanpur, with a dream of setting up a residential school for hearing-impaired children that would be truly inclusive, holistic and future-oriented. That dream took shape as 'Happy Hands'.

Today, Panda's institute is being lauded internationally. Unesco recognised Happy Hands as a unique and pioneering model of inclusive, bilingual and eco-centric education for hearing-impaired children in rural Odisha. The school was featured in Unesco's State of the Education Report for India 2025-'Bhasa Matters', published earlier this month.

"What makes our school unique is its bilingual approach and eco-education," Panda said.

Unlike most special schools where oral teaching dominates, Happy Hands ensures that Indian Sign Language (ISL) is used everywhere inside classrooms and in daily life on the campus. Panda established a sign-bilingual model, where ISL functions as the first language, providing a strong cognitive foundation for learning English as a second language.

"English is taught primarily as a written language, enabling children to grow up bilingual. We also started teaching Odia and Hindi as additional languages," explained Panda, who has been invited by President Droupadi Murmu to attend the 'At Home' reception on Republic Day.

All educators at Happy Hands are hearing-impaired teachers. Residential staff members who are not hearing-impaired are required to learn and use sign language to ensure that the environment remains genuinely inclusive.

Research and lived experience, he said, show that sign language plays a crucial role in developing independent thinking and strong cognitive foundations. "Most deaf children in India suffer cognitive setbacks due to language deprivation," Panda said. "When children grow up in families and communities where no one knows sign language, which is the case for the vast majority, they miss out on natural language acquisition during the most critical early years. This deprivation can have serious, long-lasting effects."

The school offers fully residential education from LKG to Class VIII. It admits only 10 to 12 children every year, and only in early grades such as LKG and UKG. Currently, around 70 children are enrolled, with the oldest students studying in Class VIII. All education, boarding and care are provided free of cost.

Education at the school, which runs entirely on voluntary funding, extends far beyond textbooks. Students participate daily in eco-campus activities such as gardening and engage in small design projects that are integrated into mathematics, science and art lessons. "We are starting eco-vocational training for older students this year," said Panda, who is a former vice-president of Indian Sign Language Interpreter Association.



Wednesday, January 21, 2026

கல்வியில் புரட்சி: மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி இனி இலவசம்!


20.01.2026 கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள பொது உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி (OKU) மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தங்குதடையின்றி கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான கல்வி முற்றிலும் இலவசம் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் (PICC) இன்று நடைபெற்ற “தேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டம் 2026-2035” அறிமுக விழாவில் பிரதமர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

பொதுப் பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள் (Polytechnics) மற்றும் சமூகக் கல்லூரிகளில் பயிலும் சுமார் 3,000 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் முழு கல்விக்கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் கடுமையான ஏழ்மை நிலையில் உள்ள 5,800 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த இலவசக் கல்வித் திட்டம், தற்போது விரிவுபடுத்தப்பட்டு 10,000 ஏழை மாணவர்களுக்கு பிடிபிடிஎன் (PTPTN) மூலம் உதவி வழங்கப்படவுள்ளது.

மேலும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் அறைகளை மேம்படுத்தவும் புனரமைக்கவும் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திட்டங்களை அறிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அவற்றைச் சரியாகச் செயல்படுத்துவதே முக்கியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

“இது வெறும் நினைவூட்டல் அல்ல, இது எனது கடுமையான எச்சரிக்கை. மார்ச் மாதம் முதல் இந்தத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மாதாந்தர அறிக்கைகளைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். காகிதத்தில் மட்டும் உலகத் தரம் வாய்ந்த திட்டமாக இல்லாமல், மாணவர்களுக்கு அதன் பலன் நேரடியாகச் சென்றடைய வேண்டும்,” என்று அவர் சாடினார்.

இதே விழாவில் பேசிய பிரதமர், இந்த ஆண்டு முதல் அனைத்துப் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மலேசிய அரசியலமைப்பு (Federal Constitution) மற்றும் தேசிய வரலாறு (Malaysian History) ஆகிய பாடங்கள் கட்டாயமாக்கப்படும் என்றும், இவை முழுமையாக மலாய் மொழியிலேயே கற்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த அதிரடி அறிவிப்புகள் மலேசியக் கல்வித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது, குறிப்பாகச் சமூகத்தின் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு இது பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.




உள்ளாட்சி அமைப்பில் மாற்றுத்திறனாளிகள் இடம்பெற சட்டத் திருத்தம்



20.01.2026
சென்னை: சட்டப் பேரவையில் ஆளுநர் உரையின் போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தொடக்க நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சை மற்றும் திறன் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் , அறிவுசார் குறைபாடு உடையவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்காக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமன முறையில் உறுப்பினராக்க இந்த அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் 3631 மாற்றுத் திறனாளிகள் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாகியுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை இந்த அரசு ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 5.88 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளின் மாதாந்திர பராமரிப்பு தொகை தற்போது ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.58 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.



Tuesday, January 20, 2026

பேச முடியாத மாற்றுத் திறனாளி தவறி விழுந்து உயிரிழப்பு


20.01.2026
கோவை: கோவையில் பேச முடியாத மாற்றுத் திறனாளி நள்ளிரவில் கீழே தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லம்பாளையம் கணபதியப்பன் கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (49). இவரது மனைவி சுமதி. இவா்கள் இருவரும் காது மற்றும் வாய்ப்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள். அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இந்தத் தம்பதி வேலை பாா்த்து வந்தனா்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த ரங்கநாதன் அந்தப் பகுதியில் நடந்து கொண்டிருந்தாா். அப்போது, அவா் எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த ரங்கநாதன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.



மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் இருக்கை ஒதுக்கீடு குறித்து ஆய்வு: ஐகோர்ட் உத்தரவு


19.01.2026
சென்னை: மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு, முறையாக அமல்படுத்தப்படுகிறதா என திடீர் சோதனைகள் நடத்த, மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்களில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யக் கோரி, வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மெட்ரோ ரயில் தரப்பில், ஒவ்வொரு பெட்டியிலும் மொத்தமுள்ள 50 இருக்கைகளில் 14 இருக்கைகள் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இருக்கைகளின் அருகில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என எழுதி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், தனியாக இருக்கைகள் ஒதுக்கியிருந்தாலும், அந்த இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் எவரும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வந்தால் எழுந்து இடம் வழங்குவதில்லை. அதனால், பெண்களுக்கு என தனி பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளதைப் போல, மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கீடு செய்யலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி பெட்டி ஒதுக்கீடு செய்வது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். அதனால், மனுதாரரின் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என அவ்வப்போதைக்கு திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் எனவும், இருக்கைகள் ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 30 நாட்களில் வகுக்க வேண்டும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு விட்டுத்தர மறுக்கும்பட்சத்தில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.


நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7% இடஒதுக்கீடு கோரி மனு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு




19.01.2026
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூரைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி கே.மணிவண்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் 2.68 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனா்.

கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கியும் அவை மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக கிடைக்கவில்லை.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் கடந்த 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் மனுக்கள் அனுப்பினேன். அதற்கு தோ்தல் ஆணையம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், தொகுதி மறுவரையறை சட்டத்தில் வழிவகை இல்லை என பதிலளித்துள்ளது. எனவே, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.


Saturday, January 17, 2026

பணி நிரந்தரம் செய்ய கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்



16.01.2026 
சென்னை: பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு அனைத்து துறை மாற்றுத்திறனாளி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று போராட்டம் நடந்தது.

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் முன் நடந்த போராட்டத்திற்கு, அக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜலீல் முகைதீன் தலைமை வகித்தார். போராட்டத்தில், குடும்பத்துடன் பங்கேற்ற மாற்றத்திறனாளிகள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.போராட்டம் குறித்து, ஜலீன் முகைதீன் கூறியதாவது:

அரசு துறையில் தற் காலிகமாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை, பணி நிரந்தரம் செய்யும் வகையில், கடந்த 2008ல் அரசாணை எண் 151ஐ அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி, அரசு துறையில் தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதிய முறையில், இரண்டு ஆண்டுகள் பணி செய்த, 1,077 பேர் பணி வேண்டி காத்திருக்கிறோம். ஆனால், பணி நிரந்தரம் செய்யவில்லை.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த நவம்பரில், அரசு துறைக ளில் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, போட்டி தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்கும் வகையில், அரசாணை 24ஐ வெளியிட்டு, அதிகாரி கள் பழைய அரசாணை 151ஐ ரத்து செய்துள்ளனர்.

இதனால், கடந்த 15 ஆண்டுகளாக பணி நிரந்தரம் வேண்டி காத்திருக்கும் நாங்கள், மி குந்த மன வேதனையில் உள்ளோம்.

எனவே, முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த அரசாணை 151ஐ மீண்டும் செயல்படுத்தி, அதன்படி நாங்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். இதை அதிகாரிகள் செயல்படுத்தும் வரை, காத்திருப்பு போராட்டத்தை மேற்கொள்ளுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


மாற்றுதிறனாளிகள் இலவச பஸ் பாஸ் வேண்டுமா? சிறப்பு முகாம்கள் தொடக்கம்...விண்ணப்பிப்பது எப்படி?


தமிழ்நாடு முழுவதும் மாற்றுதிறனாளிகள் இலவச பஸ்பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

16.01.2026 
வடசென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் பெற 31.01.2026 வரை சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்வதற்கான பயண அட்டை வழங்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகின்றது.

அந்த வகையில், வடசென்னை மாவட்டத்தில் வசிக்கும், மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பஸ் பாஸ் விண்ணப்பித்து பெற ஏதுவாக, சிறப்பு முகாம் மூலம் ஆன்லைனில் பஸ் பாஸ் விண்ணப்பித்து பெற்றிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் சிறப்பு முகாம்கள் வரும் ஜனவரி 31-ம்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் (அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து) சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நடக்கிறது. இந்த கார்டை பெற இ-சேவை மையம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள (பின்புறம் இ-சேவை அருகில்) வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதேபோல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அந்தந்த மாவட்ட நல அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.

தென் சென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் வேலை நாட்களில் மட்டும் தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள தென்சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம்களுக்கு சென்று விண்ணப்பித்து இலவச பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள், தகுதிகள் :

இதனை விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, யுடிஐடிஅட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், மருத்துவ சான்று, கல்வி பயில்வதற்கான சான்று, பணியிடச் சான்று ஆகியவற்றை நேரில் எடுத்து வர வேண்டும்.

தனியார் நிறுவனப் பணியாளர்கள், மாணவர்கள், சிறப்புப் பள்ளி மாணவர்கள், பயண வரம்புகள் மற்றும் பிரிவுகள், பார்வைக் குறைபாடுடையோர், கை, கால் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர், வாய் பேச இயலாதவர்கள், சிகிச்சை மற்றும் பயிற்சி எடுக்கும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.