Tuesday, March 15, 2022
Thursday, March 10, 2022
Saturday, March 5, 2022
சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
03.03.2022 கருப்பூர்:
சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனமும், சேலம் மறு வாழ்வு நிறுவனமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு முகாமை சேலம் 3 ரோட்டில் உள்ள மறுவாழ்வு நிறுவன வளாகத்தில் நடத்தின. சேலம் மறுவாழ்வு நிறுவனத்தின் இயக்குனர் வாசுகி விஜயகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்நலத்துறையின் பேச்சு பயிற்சி மற்றும் செவித்திறன் நிபுணர் ஸ்ரீதேவி, சேலம் பேச்சு பயிற்சி மற்றும் செவித்திறன் பரிசோதனை மையத்தின் உரிமையாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். முகாமில் மாற்றுத்திறனாளிளுக்கு பயிற்சியும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
செவித்திறன் பாதித்தவர்களுக்கு ஸ்மார்ட் போன்: விண்ணப்பம் வரவேற்பு
28.02.2022
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஸ்மார்ட் போன் இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், 18 வயது, அதற்கு மேற்பட்ட இளநிலைக் கல்வி பயிலும் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்கும் திட்டம் உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிப்போர், மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், கல்வி, பணி, சுயதொழில் ஆகியவை தொடர்பான சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் மார்ச் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.வருமான உச்சவரம்பு ஏதுமின்றி இத்திட்டத்திற்கு உரிய விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படுகிறது.எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் போன் பெற விண்ணப்பித்து பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Friday, March 4, 2022
ரயில் மோதி மாற்றுத்திறனாளி பலி
20.02.2022
மயிலாடுதுறை: குத்தாலத்தில் ரயில் மோதி மாற்றுத்திறனாளி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பொன்மலையைச் சேர்ந்தவர் ராஜு,30. காதுகேளாத மாற்றுத்திறனாளி. பெயிண்டர் ஆன இவர் பொன்மலை ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ராஜ கோபாலபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த இவர் அங்கேயே தங்கி பெயிண்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை ராஜு ராஜகோபாலபுரம் ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் இணைந்த வாய் பேச முடியாத ஜோடிக்கு கோலாகலமாக நடந்த திருமணம்!
ஆன்லைன் யுகத்தில் தினமும் ஆயிரம் காதல் கதைகள் சோசியல் மீடியா மூலமாக முளைக்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் துளிர்விடும் முகம் தெரியாத காதல்கள் அனைத்தும் மணவறையை சென்று அடைவது கிடையாது. ஆனால் வாய்பேச முடியாத ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல், கல்யாணத்தில் முடிந்துள்ளது. மனதை உருக வைக்கும் இன்ஸ்டாகிராம் காதல் கதை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானாவில் உள்ள ஜகிதியா மாவட்டத்தின் ராய்கல் மண்டலத்தைச் சேர்ந்த அத்ரம் லதா என்கிற ஜோதி, ஆந்திரப்பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலைச் சேர்ந்தவர் அருண். இருவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகி வந்துள்ளனர். ஆரம்பத்தில் நண்பர்களாக பரஸ்பரம் பழக ஒருவரைப் பற்றி, ஒருவருக்கு நன்றாக புரிதல் வந்துள்ளது. புரிதலின் அடுத்தகட்டம் என்ன காதல் தான். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த சிறிது காலத்திற்குள்ளாகவே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
வாய்பேச முடியாத இரு மாற்றுத்திறனாளிகளிடையே உருவான அன்பிற்கு, இன்ஸ்டாகிராமில் ஆதரவு குவிந்தது. இதனையடுத்து அத்ரம் லதா, அருண் திருமணத்தை முன்னின்று நடத்தி வைக்க ஜாகிடியலில் உள்ள சமூக சேவகர்கள் குழு முன்வந்தது.
திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தி செய்து, பாரம்பரிய முறைப்படி விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்தனர். மேலும் இளம் தம்பதி புதிதாக மண வாழ்க்கையை ஆரம்பிக்க தேவையான பொருட்களையும் வழங்கி வாழ்த்தினர்.
முகமது பாபுஜான், ரியாஸ் மற்றும் கசரபு ரமேஷ் ஆகியோரது சமூக சேவைக்குழு, கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது பலருக்கும் உதவி புரிந்துள்ளது. "கொரோனா தொற்றுநோய் காலத்தில் மக்களுக்கு நாங்கள் உதவிகள் செய்தோம். இப்படியொரு ஜோடிக்கு உதவியதை நாங்கள் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறோம். ஒருவரை ஒருவர் உளமார காதலிக்கும் இந்த ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்து, அவர்கள் குடும்பம் நடத்த தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் இதேபோல் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஜோடி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு திருமணத்தில் கூட வாய்பேச முடியாத, காது கேளாதவர்கள் விருந்தினர்களாக அதிக அளவில் பங்கேற்றது சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்தது. திருமணத்தில் கலந்து கொண்ட சைகை மொழி நிபுணர் ரஜனி பானர்ஜி, தம்பதிகளுக்கும் அவர்களது விருந்தினர்களுக்கும் திருமண மந்திரங்களை சைகை மொழியில் விளக்கியிருந்தார்.
காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் சிறப்பாகத் தொடர்புகொள்வதற்காக, டெல்லியில் உள்ள இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் 2018 இல் 3,000 ISL சொற்களைக் கொண்ட ISL அகராதியின் முதல் பதிப்பை உருவாக்கியது. இதுபோன்ற முதல் அகராதி, 6,000 சொற்களைக் கொண்ட இரண்டாவது பதிப்பில் மார்ச் 2019 இல் புதுப்பிக்கப்பட்டது.
Tuesday, February 15, 2022
புதுக்கோட்டை நகராட்சியில் தி.மு.க. போட்டி வேட்பாளராக களம் இறங்கிய வாய்பேச முடியாத பெண்
12.02.2022
புதுக்கோட்டை:தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போட்டி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் களம் இறங்கி உள்ளனர். புதுக்கோட்டை நகராட்சி 31-வது வார்டில் வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளார்.
புதுக்கோட்டை போஸ் நகர் 9-வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சரிதா (வயது 36). 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது கணவர் அங்குள்ள ஒரு தனியார் சோப்பு கம்பெனியில் கூலி தொழிலாளியாக இருக்கிறார். இரு வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சுப்பிரமணியன் குடும்பத்தினர் பாரம்பரியமாக தி.மு.க.வில் இருக்கிறார்கள். இதையடுத்து சரிதா கட்சி சார்பில் போட்டியிட மனு அளித்து நேர்காணலிலும் பங்கேற்றார். ஆனால் இறுதியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு வேட்பாளர் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டார். இருப்பினும் நம்பிக்கை இழக்காத சரிதா சுயேட்சையாக 31-வது வார்டில் போட்டியிடுகிறார்.
தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சரிதாவின் கொழுந்தனார் மணி (கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி) கூறியதாவது:-
எனது அண்ணி சரிதா திறமையானவர். மக்களுடன் சகஜமாக பழகுவார். மக்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் முன்னால் போய் நிற்பார். காது கேட்காத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி என்றாலும் சைகை மூலம் அவரிடம் பேச வேண்டியதில்லை. நமது வாய் அசைவினை வைத்தே நாம் என்ன பேசுகிறோம் என் பதை தீர்க்கமாக உணர்ந்து கொள்வார்.
வாய்பேச முடியாத, காது கேட்காதவர் வெற்றி பெற்றால் மக்கள் பிரச்சினைகளை எவ்வாறு கேட்டு, நகரட்சியில் குரல் கொடுப்பார்கள் என சிலர் கேட்கிறார்கள். அதற்கும் அண்ணி (சரிதா) விடை கொடுத்துள்ளார்.
எழுத்துப்பூர்வமாக நகராட்சியில் வாதாடி மக்கள் பிரச்சினைகளை, தேவைகளை பூர்த்தி செய்வேன் என்கிறார். வாக்குறுதிகளுடன், இதனையும் துண்டு பிரசுரமாக அச்சிட்டு வாக்காளர்களுக்கு வினியோகிக்கிறோம். அரசியல் கட்சிகள் பணத்தால் ஜெயித்து விடலாம் என கருதுகிறார்கள். இந்த வார்டில் 80 மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள்.
அண்ணன் மாற்று சமூகத்தை சேர்ந்த அண்ணியை கரம் பிடித்ததால் இருவேறு சமூகத்திலும் ஏராளமான சொந்த பந்தங்கள் இருக்கிறார்கள். சரிதாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
6 குறைகள் இருந்தால் சலுகை: பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு
கோவை:பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள், அரசு தேர்வுத்துறை பட்டியலிட்ட ஆறு விதமான குறைபாடுகளின் கீழ் வரும் பட்சத்தில், சலுகைகளை பெறுவதற்கான விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் நேரம், தேர்வு எழுதுவதற்கு உதவியாளர் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம்.அதன்படி, சலுகை தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதன்படி, பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர், உடல் ஊனமுற்றோர், கைமுறிவு ஏற்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா குறைபாடு, நரம்பியல் குறைபாடு, ஆகிய குறைபாடுள்ளவர்களுக்கு, சலுகை வழங்கப்படவுள்ளது. தகுதியுடைய மாணவர்களின் அடையாள அட்டை நகல், மருத்துவ குழுவின் பரிந்துரைக்கடிதம் பிற விபரங்களை, சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Friday, February 11, 2022
Subscribe to:
Posts (Atom)