செவித்திறன் மற்றும் மோட்டார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவும் வகையிலான நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மலிவு விலை கருவிகளை ஐஐடி மெட்ராஸ் உருவாக்கியுள்ளது.
மாற்றுத்திறன் கொண்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் வாழ்க்கை பல்வேறு கடினங்களை அன்றாட வாழ்வில் சந்திக்க வேண்டி இருக்கிறது. எல்லா சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் தயாராக இருந்தாலும் சில சூழல்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் நிர்வாகிகள் இடையே தொடர்பை ஏற்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தைக் கொண்டு செல்ல வேண்டும் அதையும் மலிவு விலையில் அனைவரும் வாங்கக்கூடிய வகையில் வடிவமைக்க வேண்டும் என்பதில் வெற்றியடைந்துள்ளனர் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள்.
செவித்திறன் குறைபாடு மற்றும் மோட்டார் குறைபாடுகள் உள்ளவர்கள் சுதந்திரமாகத் தொடர்புகொள்வதற்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் நவீனங்களுடன் ஏற்கனவே உருவாக்கப்பட்ட அணியக்கூடிய சாதனங்களை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் மேம்படுத்தியுள்ளனர். இந்த அணியக்கூடிய சென்சார்கள் இன்டர்நெட் ஆஃப் திங்ஸில் பயன்படுத்தப்படும் அதி நவீன சென்சார் தொழில்நுட்பங்களைக் கொண்டதாகும்.
சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவின் சிஎஸ்ஆர் முன்னெடுப்புகளின் மூலம் ஐஐடி மெட்ராஸின் இந்தத் திட்டங்களுக்கு ஆதரவு தருகிறது. ஐஐடி மெட்ராஸின் பல்துறை மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி மற்றும் கல்வி முயற்சியான புனர்வாழ்வு பொறியியல் மற்றும் உதவி தொழில்நுட்ப மையம் (CREATE) இந்தியாவில் உள்ள பல்வேறு திறன்களைக் கொண்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் குறைந்த விலை தொழில்நுட்பங்களின் உள்நாட்டு வளர்ச்சிக்கான முக்கிய சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.
CREATEஆல் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் இரண்டு முக்கியக் கருவிகள் 'வைப்' (VIBE) மற்றும் 'ஐ ஜெஸ்ட்' (I gest). இவை இரண்டும் முறையே செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காகவும் மோட்டார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் உதவக் கூடியவையாகும்.
இரண்டு சாதனங்களும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் மற்றும் மெஷின் லெர்னிங் தொழிற்நுட்பங்களின் சிறந்த பயன்களை உள்ளடக்கியதாகும். ரீச்சார்ஜபிள் பேட்டரி, ப்ளூடூத் மலம் மொபைல் போனுடன் தொடர்பு கொள்ளும் வசதியும் இந்தக் கருவியில் பொருத்தப்பட்டுள்ளது.
பேராசிரியர் அனில் பிரபாகர் நடுவில் இருப்பவர்) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு |
ஐஐடி மெட்ராஸ் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் துறையின் இயக்குனர் டாக்டர். அனில் பிரபாகர் தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர் இந்தக் கருவிகளை உருவாக்கியுள்ளனர். VIBE மற்றும் நான் நம்மிடம் விரிவாகப் பேசிய அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் பிரதீப் தங்கராஜ்,
“இந்த இரண்டு கருவிகளும் தற்போது பிரபலமாக பலராலும் பயன்படுத்தப்படும் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் வாட்சுகளைப் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியவையே ஆகும். VIBE என்பது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத நபருக்காக குறிக்கப்படுகிறது,” என்றார்.
100 சதவீத மாற்றுத்திறன் கொண்டவர்கள் வரை அனைத்து வயதினரும் இதனைப் பயன்படுத்தலாம். மைக்ரோஃபோன் மற்றும் குரல் அங்கீகாரத் தொகுதிகளைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட பல ஒலி வடிவங்களை 'வைப்' கொண்டுள்ளது.
அழைப்பு மணி, அலாரம், அழும் குழந்தை உள்ளிட்ட 10 உயர் ஒலிகளை அதிர்வுகள் மூலம் காதுகேளாதவருக்கு வெளிப்படுத்தி அவரை விழிப்படையச் செய்தார். பயனரைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு அதிர்வு கொடுப்பதோடு LED-களையும் ஒளிரச் செய்யலாம். இதனால் தனியாக இருக்கும் செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் ஒலியின் மூலம் விழிப்படைய முடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும். அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப அதிர்வை பொருத்தி வைத்துக் கொள்ளலாம்.

I Gest-ஐ பொருத்த வரையில் பெருமூளை முடக்குவாதம் உள்ளவர்களுக்கு ஒரு மாற்று மேம்பட்ட தகவல் தொடர்பு சாதனமாகச் செயல்படும். இது குறைந்த மோட்டார் திறன் கொண்டவர்களின் சைகைகளை அடையாளம் கண்டு அவற்றை ஸ்மார்ட் போன் மூலம் ஆடியோ அவுட்புட்டாக மாற்றும்.
பெருமூளை வாதம் கொண்ட நபர்கள் எதிர்கொள்ளும் பேச்சு குறைபாடு மற்றும் மோட்டார் குறைபாடுகள் போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதே இந்தக் கருவியின் நோக்கமாகும். பெருமூளை முடக்குவாதம் உள்ளவர்களால் உடல் பாகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. Quadraplegic மற்றும் diplegic என்று வகைப்படுத்தப்படும் போது அதன் தன்மைக்கேற்ப உடல் பாகங்களின் செயல்பாடுகள் முடக்கப்படும்.
ஐ ஜெஸ்ட் கருவி |
பெருமூளை வாதம் உள்ளவர்களுக்கு இயக்கங்கள் சாதாரண மக்களை விட மிக மெதுவாகவும், குறைவாகவும் செய்த செயல்களின் செயல்பாடுகள் குறிப்பனவாகவும் இருக்கும். பாதிக்கப்பட்டவர்களின் செய்கைகளுக்கு ஏற்ப எச்சரிக்கை ஒலியை செட் செய்து விட்டு மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த இந்தக் கருவி உதவுகிறது.
இது போன்ற பாதிப்பு உள்ளவர்கள் செய்யக்கூடிய 30 செய்கைகளுக்கு இந்த கருவி உதவுகிறது எழுப்பி விழிப்படையச் செய்யும் தரவுகளின் அடிப்படையில் நான் கெஸ்ட் ஆனது
இது போன்ற பாதிப்பு உள்ளவர்கள் செய்யக்கூடிய 30 செய்கைகளுக்கு இந்த கருவி உதவுகிறது எழுப்பி விழிப்படையச் செய்யும் தரவுகளின் அடிப்படையில் நான் கெஸ்ட் ஆனது
வர்த்தகத்திற்காக Enability என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் கைகோர்த்து பயனருக்கு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் சந்தைப்படுத்தப்படும் பொருட்களின் தயாரிப்பு விலையை விட அதன் வடிவமைப்பிற்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும், ஆனால், வைப் மற்றும் ஐஜெஸ்ட் இரண்டு வடிவமைப்பிற்கான கட்டணமின்றி மூலதன விலை வசூலிக்கப்பட வேண்டும் என்று ஸ்டார்ட் அப் நிறுவனத்திடம் கூறி இருப்பதனால் ரூ.2ஆயிரத்திற்குள்ளேயே பயனாளிகள் கிடைக்கும்.
இந்தக் கருவிகளை பரிசோதிக்க விரும்புபவர்கள் ஐஐடி மெட்ராஸை அணுகலாம். இந்தக் கருவிகளை பயன்பாட்டிற்கு வாங்க விரும்புபவர்கள் Enability Foundation-இல் https://enability.in/#/igest பதிவு செய்து வாங்கலாம்.
இந்தக் கருவியை எப்படி பயன்படுத்துவது என்று தன்னார்வ அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, அவர்கள் மூலம் கருவிகளை வாங்கும் பயனருக்கு விளக்கப்படும். மேலும் இந்தக் கருவிகளுக்கு வாரண்டியும் இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அவை சரிபார்த்து தரப்படும் என்றும் பிரதீப் தங்கராஜ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment