FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, September 5, 2025

காது கேளாதோருக்கான சிகிச்சை மையம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு



02.09.2025 மைசூரு : ''காது கேளாத, வாய் பேச முடியாத பிள்ளைகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஏ.ஐ.ஐ.எஸ்.எச்., மையத்தை நிர்வகித்து வரும் மகளிரின் சேவை பாராட்டுக்குரியது,'' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.

மைசூரு மானச கங்கோத்ரி கல்வி வளாகம் அருகில் மத்திய அரசுக்கு சொந்தமான காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் ஏ.ஐ.ஐ.எஸ்.எச்., மையத்தின் வைர விழாவை நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான சிகிச்சை, கல்வி, ஆராய்ச்சியில் தொடர்ந்து சேவை செய்து வரும் ஏ.ஐ.ஐ.எஸ்.எச்., மையம், நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. 1965ல் துவக்கப்பட்ட இம்மையம், 60 ஆண்டுகளாக இத்துறையில் சாதனை படைத்து வருகிறது.

குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தை பல ஆண்டுகளாக பெண்களே நிர்வகித்து வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். இம்மையத்தின் இன்றைய இயக்குநர் புஷ்பலதாவின் சேவை பாராட்டத்தக்கது.

இம்மையம் துவங்க காரணமான அன்றைய மன்னர் ஜெய சாமராஜேந்திர உடையார், நிலம் வழங்கியதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்று அவரது குடும்பத்தின் வாரிசு யதுவீர் உடையார், விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி.

புள்ளி விபரங்கள்படி, 2023ல் இந்தியாவில் 6 கோடி பேர் வாய் பேச முடியாமல், காது கேட்காத பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தொழில்நுட்ப உலகில் இவர்கள் நவீன கருவிகளை பயன்படுத்தி, தங்களின் பிரச்னையை தீர்க்கலாம்.

காது கேட்கும் கருவிகளை தயாரிப்பதில் இம்மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக செய்கை மொழி தினத்தை ஆண்டுதோறும் செப்., 23ம் தேதி கடைபிடித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா உட்பட பலர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment