FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, January 14, 2025

காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஹீரோ மாற்றம் கொண்டு வந்தாரா? வணங்கான் விமர்சனம்!



14.01.2025 
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் ரோஷ்னி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்ததா?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா இயக்கத்தில், சூர்யா நடிக்க கமிட் ஆகி அவர் விலகியதால் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் தான் வணங்குகிறேன், மாற்றுத்திறனாளியான அருண் விஜய், கன்னியாகுமரியில், நிரந்தரமான வேலை எதுவும் இல்லாமல், கிடைத்த வேலைகளை செய்துகொண்டு தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். அதே சமயம் கோபக்காரரான இவர், அடிதடியில் ஈடுபட்டு வருகிறார்.

அருண்விஜய் அடிதடியில் ஈடுபட்டு வருவதால், அருகில் வசிப்பவர்கள் அவரை ஒரு ஆதவோர் இல்லத்தில், வேலைக்கு சேர்த்துவிடுகின்றனர். அங்கு பார்வையாற்ற பெண்கள் குளிப்பதை 3 பேர் பார்க்கின்றனர். இதை பார்த்துவிட்ட அருண்விஜய், அவர்களை அடித்து உதைத்து இருவரை கொலை செய்துவிடுகிறார். ஒருவரை மட்டும் தப்பித்துவிட, அருண்விஜய் கொலை செய்ததற்காக கைது செய்யப்படுகிறார்.

போலீஸ் விசாரணையில் எதுவும் சொல்ல மறுக்கும் அருண் விஜய், அடுத்து என்ன செய்தார்? தப்பித்த அந்த ஒருவரின் நிலை என்ன? காவல்துறை இந்த வழக்கில் என்ன செய்தது என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை. பாலா தனது வழக்கமான பாணியில், இருந்து சற்றும் விலகாமல், அதேபாணியிலான ஒரு படத்தை கொடுத்துள்ளார். குறிப்பாக அருண்விஜய் கேரக்டர் பிதாமகன் விக்ரம் கேரக்டரை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சூர்யா விலகியதால், இந்த படத்தில் கமிட் ஆன அருண் விஜய், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு, நடிப்பில் வித்தியாசத்தை காட்டியுள்ளார். அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக அருண் விஜய் வாழ்ந்திருக்கிறார். அவரை போல், ரோஷ்னி பிரகாஷூம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் தங்கையாக நடித்துள்ள நடிகை ரிதா அண்ணனுக்காக உருகும்போது நம்மையும் சேர்த்து உருக வைக்கிறார். தனது அண்ணனிடம் சைகையில் பேசும்போது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அண்ணன் தங்கை பாசத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாலா அழுத்தமாக கூறியுள்ளார். பாடல்களில் ஜி.வி.பிரகாஷ், பின்னணி இசையில் சாம்.சி.எஸ். அசத்தியுள்ளனர்.

மொத்தத்தில், 6 வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை கொடுத்துள்ள இயக்குனர் பாலா அதை நேர்த்தியாக மாற்றுகிறார், இன்றைய தினத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தமாகவும் சொல்லி, கவனம் ஈர்த்துள்ளார்.


No comments:

Post a Comment