03.04.2017
பட்டிவீரன்பட்டி: காதுகேளாதோருக்கான இந்திய கூடைப்பந்தாட்ட அணியின் கேப்டனாக திண்டுக்கல்லை சேர்ந்த பள்ளி மாணவர் விஷ்ணுராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணுராம். தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கூடைப்பந்தாட்ட வீரர். பிறவியிலேயே வாய் பேச முடியாத இவருக்கு, செவித்திறன் குறைபாடும் உள்ளது. சென்னையில் காதுகேளாதோருக்கான தேசிய கூடைப்பந்தாட்ட போட்டி மார்ச் 28 - 31 வரை நடந்தது.மொத்தம் 12 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், புதுச்சேரி அணிக்காக விஷ்ணுராம் விளையாடினார். சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு தங்கப்பதக்கம் பெற்றார். வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள சர்வதேச காதுகேளாதோர் கூடைப்பந்தாட்ட போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை ரமேஷ்பாபு முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர். தாய் சர்மிளா முடக்குவாதத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment