01.04.2017
சென்னை: தேசிய அளவிலான, காது கேளாதோர் விளையாட்டு போட்டிகளில், வாலிபால் பெண்கள் பிரிவில், தமிழக அணியும், ஆண்கள் பிரிவில், கேரள அணியும்
சாம்பியன் பட்டத்தை வென்றன.
தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு சங்கம் சார்பில், அகில இந்திய காது கேளாதோர் விளையாட்டு சங்க ஆதரவுடன், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், சென்னையில் நடந்தன.
அதில், தமிழகம் உட்பட, நாடு முழுவதும் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், பல்வேறு போட்டி களில் பங்கேற்று, பதக்கம் மற்றும்
சான்றிதழ்களை பெற்று சென்றனர்.
நேரு விளையாட்டு அரங்கில் உள்ள வாலிபால் கோர்ட்டில், வாலிபால்
போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவு போட்டியில், அபாரமாக விளையாடிய தமிழக அணி, மத்திய பிரதேச அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை
வென்றது. அதில், மூன்றாவது இடத்தை, ஆந்திர அணி பிடித்தது.
ஆண்கள் பிரிவில், கேரளா, தெலுங்கானா, ஒடிசா அணிகள், முதல் மூன்று இடங்களை தட்டிச் சென்றன. இந்த அணிகளுக்கு, பதக்கம் மற்றும்
சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நேரு விளையாட்டு அரங்க, 'பி' மைதானத்தில், ஆண்கள் பிரிவு கால்பந்து போட்டி நடந்தது. அதில், தமிழக அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோல்களை அடித்து, முதலிடத்தை பிடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றனர். இரண்டாம் இடத்தை,
கேரள அணியும், மூன்றாம் இடத்தை மேகாலயா அணியும் பிடித்தன.

No comments:
Post a Comment