FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, April 11, 2017

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

03.04.2017, கண்ணமங்கலம்: 
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே கல்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரி, 22, வாய் பேச முடியாதவர். கடந்த, 2012 டிச., 23ல், வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த கோபால், 35, என்பவர், வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து, கண்ணமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான கோபாலை தேடி வந்தனர். இந்நிலையில், கண்ணமங்கலம் போலீசார், நேற்று கொளத்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், மாற்றுத்திறனாளி யோகேஸ்வரியை பலாத்காரம் செய்த கோபால் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கோபாலை போலீசார் கைது செய்தனர்

No comments:

Post a Comment