FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, April 8, 2017

விக்டோரியா மாணவர் விடுதி பாதுகாப்பு குறைபாடுடன் தான் இயங்குகிறது: கல்லூரி முதல்வர் ஒப்புதல்

07.04.2017, சென்னை: 
விக்டோரியா மாணவர் விடுதிபாதுகாப்பு குறைபாடுடன் தான் இயங்குகிறது என் கல்லூரி முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார். சென்னை மாநிலக்கல்லூரியின் விக்டோரியா மாணவர் விடுதியில் மாற்றுத்திறனாளி மாணவர் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்தது தொடர்பாக மாநிலக்கல்லூரி முதல்வர் பிரம்மானந்த பெருமாள் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: விக்டோரியா மாணவர் விடுதி கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தில் இருக்கும் பாதுகாப்பற்ற அம்சங்களையும் வசதியின்மை தொடர்பாக தொழில்நுட்ப துறைக்கு, சில ஆண்டுகளுக்கு முன் எடுத்து கூறினோம். அதுதொடர்பாக நினைவூட்டல்களையும் பல முறை அளித்துள்ளோம்.

வெளிமாவட்ட மாணவர்கள் (குறிப்பாக காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள்) நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சில பாதுகாப்பு குறைபாடு விடுதியில் இருப்பதாக கருதினாலும், மாணவர்கள் தொடர்ந்து அங்கு தங்கிக்ெகாள்ள அனுமதிக்கப்படுகிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில் விடுதி வளாகத்தில் கார் பார்க்கிங் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்காக கிரிக்கெட் மைதான நிர்வாகத்திடம் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.1000 பெறப்பட்டு விக்டோரியா மாணவர் விடுதியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. அந்த பணம் விடுதி மாணவர்களுக்காக செலவிடப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment