FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, April 5, 2017

காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவி சாதனை

01.04.2017
நம்பிக்கை தான் வாழ்க்கை, மனதில் உறுதி இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம். அதற்கு உடல் ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிருபிக்கும் வகையில், வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.

பல கல்லுாரிகளில் அலைந்து திரிந்து சீட் கிடைக்காத மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை அரவணைத்து உற்சாகப்படுத்கி வருகிறது இக்கல்லுாரி நிர்வாகம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தக்கல்லுாரியில் படிக்கும் மாணவர்களின், 80 சதவிகிதம் பேர் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் தான் என்பது முற்றிலும் உண்மை.பச்சமலை எஸ்டேட் தொழிலாளர்கள் செல்லத்துரை - யோகமலர் தம்பதிகளின் மகள் ரஞ்சிதா. இவருக்கு காதுகேளாத சூழ்நிலையில், எங்கே நமக்கு கல்லுாரியில் படிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமோ என்ற நேரத்தில், கல்லுாரியில் இவருக்கு சீட் வழங்கியதோடு, சிறப்பு கவனம் செலுத்தி பாடம் சொல்லித்தருகின்றனர்.இது குறித்து மாணவியின் தந்தை செல்லத்துரை நம்மிடம் கூறுகையில், ''எனது இரண்டாவது மகள் ரஞ்சிதா. இவர் 6ம் வகுப்பு படிக்கும் போது திடீரென்று காதுகேட்கவில்லை. மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றனர். கூலி வேலை செய்து பிழைக்கும் எங்களுக்கு அவ்வளவு பணம் செலுத்த இயலாது என்பதால், இறைவன் விட்ட வழியில் மகளை தொடர்ந்து படிக்க வைக்கிறேன். இன்று வரை எந்த வகுப்பிலும் பெயிலாகாமல் படித்து வருகிறாள். எனது மகளுக்கு சீட் வழங்கிய வால்பாறை கல்லுாரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,'' என்றார்.கல்லுாரி தமிழ்பேராசிரியர்கள் கோவிந்தராஜ், தமிழ்கனி ஆகியோரிடம் கேட்ட போது, ''இக்கல்லுாரியில் பி.ஏ.,தமிழ் முதலாமாண்டு படித்துவரும் மாணவி ரஞ்சிதாவுக்கு காது மட்டும் தான் கேட்காது. ஆனால் நாம் சொல்லித்தரும் பாடங்களை உடனுக்குடன் மனப்பாடம் செய்து, தேர்வை திறம்பட எழுதுகிறாள். மேலும் இந்த மாணவிக்கு மட்டும் தனியாக சிறப்பு பாடம் சொல்லித்தரப்படுகிறது. மாணவி படிப்பில் மட்டுமல்லாது கவிதை எழுதுவதிலும், இசை அமைப்பதிலும், விளையாட்டு போட்டிகளிலும் அதிக அளவில் பங்கு பெற்று சாதனை படைத்துள்ளார்,'' என்றனர். மாணவி ரஞ்சிதாவிடம் கேட்ட போது, ''வால்பாறை கல்லுாரியில் 'சீட்' கிடைத்தது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். எனது ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் என்று கல்லுாரி போராசிரியர்கள் மற்றும் எனது பெற்றோர்கள் தான் தெரிகின்றனர். நன்றாக கவிதையும் எழுதுவேன். நான் நன்றாக படித்து என்னை போன்ற ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் வகையில் ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என்பது தான் எனது ஆசை,'' என்றார்.இவரது லட்சியம் நிறைவேற நாமும் மனதார வாழ்த்தலாமே!-

No comments:

Post a Comment