FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, April 6, 2017

உடைந்த பால்கனி வழியாக தவறி விழுந்த (காதுகேளாத, வாய் பேச முடியாத, பார்வை குறைபாடு உடையவர்) மாற்றுத்திறனாளி படுகாயம்: விக்டோரியா விடுதி மாணவர்கள் நள்ளிரவில் உள்ளிருப்பு போராட்டம்

06.04.2017
* கல்லூரி நிர்வாகம் மீது சரமாரி குற்றச்சாட்டு
* பாழடைந்த கட்டிடத்தால் பாதுகாப்பு கேள்விக்குறி
* புதிய கட்டிடம் கட்ட ஒதுக்கிய ₹60 கோடி எங்கே?

சென்னை: சென்னை மாநில கல்லூரி மாணவர்களுக்கான விக்டோரியா விடுதி, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே உள்ளது. இதில், 430 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இவர்களில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் (காது கேளாதோர், பார்வை குறைப்பாடு உடையவர்கள், வாய் பேச இயலாதவர்கள்). இந்த விடுதியில் உள்ள 160 அறைகளில் 10க்கும் மேற்பட்ட அறைகள் பயன்படுத்துவதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே விடுதி வளாகம் இருளில் மூழ்கி கிடக்கிறது. கழிவறை, வராண்டா, படிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின்விளக்குகள் எரிவது இல்லை. இதனால், இரவு நேரத்தில் மாணவர்கள் தங்களின் செல்போனில் உள்ள விளக்குளை பயன்படுத்தி தான் மெஸ், கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

மேலும், பெரும்பாலான அறைகளிலும் மின்சாதன பொருட்கள் பழுதாகி, மாணவர்கள் தினமும் இருளில் படிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. விடுதியின் மூன்று தளத்திலும் வரண்டாவில் உள்ள தடுப்புச்சுவர் உடைந்து ஆபத்தான நிலையில் தொங்குகிறது. இதனால், இரவு நேரங்களில் மாணவர்கள் கீழே தவறி விழும் நிலை உள்ளது. எனவே, விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும், தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என கல்லூரி முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், விடுதியின் 105வது அறையில் தங்கியிருக்கும் வந்தவாசியை சேர்ந்த பி.காம் இறுதியாண்டு மாணவர் பாலு (20) (காதுகேளாத, வாய் பேச முடியாத, பார்வை குறைபாடு உடையவர்) நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு மூன்றாவது தளத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளார். பின்னர், வராண்டாவில் நடந்து சென்றபோது, தடுப்புச்சுவர் இடிந்து திறந்தவெளியாக இருந்த பகுதியை நடைபாதை என நினைத்து காலை எடுத்து வைத்ததால், மூன்றாது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

இதில், அவருக்கு கை, கால், முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால், அவர் கீழே தவறி விழுந்தது யாருக்கும் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து அவ்வழியாக முதலாமாண்டு படிக்கும் மாணவர் ஒருவர் கழிப்பறை செல்ல வந்தபோது, அலறல் சத்தம் கேட்டதால், பள்ளத்தில் எட்டி பார்த்துள்ளார். ஆனால், அங்கு மின்விளக்குகள் இல்லாததால் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து, அறைக்கு சென்று செல்போனை எடுத்து வந்து, டார்ச் அடித்து பார்த்தபோது, அங்கு பாலு உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சக மாணவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாணவர் கீழே விழுந்தததற்கு கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று கூறி, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு விடுதி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து கல்லூரி முதல்வர் பிரம்மானந்த பெருமாள், அண்ணா சதுக்கம் போலீசார் நள்ளிரவு 2 மணி அளவில் விடுதி வளாகத்துக்கு வந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து, இதற்கு நிரந்திர தீர்வு காணப்பட்டால்தான் நாங்கள் கலைந்து செல்வோம் என கூறினர். இதையடுத்து, ஒரு வாரத்துக்குள் விடுதி வளாகத்திற்கான பராமரிப்பு பணிகளை தொடங்குவதாகவும், காயமடைந்த மாணவரின் மருத்துவ செலவுகளை ஏற்பதாக கல்லூரி முதல்வர் மற்றும் போலீசார் உறுதியளித்தனர். அதைதொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
Continue....
இதுகுறித்து விடுதி மாணவர்கள் கூறுகையில், ‘விக்டோரியா விடுதியை பராமரிக்க கோரி ஆண்டுதோறும் போராட்டம் நடத்துகிறோம். அப்போது, சம்பவ இடத்துக்கு வரும் அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். ஆனால், அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 2 நாட்களுக்கு பின் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி முதல்வர் மிரட்டுகிறார். போராட்டத்தின்போது பத்திரிகையாளர்கள் வந்தால், கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் நலனுக்காக செயல்படுவது போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கி, போலியாக ஒரு மாணவர் கமிட்டி அமைத்து, சுமூக தீர்வு எட்டப்பட்டதாக கூறிவிடுகின்றனர். ஆனால், இதுவரை மாணவர் கமிட்டி என்ற இன்று இதுவரை இல்லை. தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரி என்பதால், கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்டு போராடும் மாணவர்களை தேர்வில் மதிப்பெண்னை குறைத்து உன்னை பெயில் ஆக்கி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.

2014ம் ஆண்டு இதேபோல், அடிப்படை வசதிகளை கோரி மாணவர் போராடியபோது, அப்போதைய முதல்வர் கல்லூரி விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறி அதற்கான வரைபடத்தை காட்டி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தற்போது 3 ஆண்டுகள் ஆகியும் கட்டுமான பணிக்காக சின்ன துரும்பு கூட நகரவில்லை. மாணவர்களே, சமையல் பணியாளர்களை ஏற்பாடு செய்து விடுதியில் உள்ளவர்களுக்கான உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 430 மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கான மெஸ் செலவு ரூ.4 முதல் 5 லட்சம் மட்டுமே செலவானது. ஆனால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் விடுதி மாணவர்களுக்கு சமைக்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் வழங்கியுள்ளனர்.

அவர்களோ ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி, ஜனவரி மாதத்துடன் சமைப்பதை நிறுத்திவிட்டனர். தற்போது நாங்கள் உணவுக்காக வெளியில் உள்ள உணவு விடுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. முழுமையாக ஒரு வருடம் கூட மெஸ் இயங்காத நிலையில், சாப்பிட செலவு மட்டும் வழக்கத்தை விட இருமடங்கு வந்துள்ளதாக கூறி எங்களிடம் கூடுதல் பணம் வசூல் செய்கின்றனர். அதை, தர மறுக்கும் மாணவர்களிடம் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தர மாட்டோம் என மிரட்டுகின்றனர். இதனால், வேறு வழியில்லாமல் பணத்தை கொடுத்து விடுகிறோம்,’ என குமுறுகின்றனர்.

உதவித்தொகை அபேஸ்

விடுதியில் தங்கியிருக்கும் ஆதிதிரவிடர் மற்றும் பிறப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, தங்கள் செலுத்தும் கட்டண தொகையில் பாதி பணம் திருப்பி அவர்களிடம் வங்கி கணக்கில் செலப்படுகிறது. ஆனால், அதை விடுதி பொறுப்பாளர்கள், மாணவர்களிடம் இருந்து கையப்பம் மட்டும் வாங்கி கொண்டு அந்த பணத்தை அவர்கள் எடுத்து கொள்வதாக மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 லட்சம் வரை மோசடி நடப்பதாக கூறப்படுகிறது.

வருவாய் சுருட்டல்

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கும்போது, எங்கள் விடுதி வளாகத்தில் உள்ள மைதானம் பார்க்கிங் பகுதியாக பயன்படுத்தப்படும். அதற்காக கிரிக்கெட் மைதான அதிகாரிகள் லட்சக்கணக்கில் கல்லூரி நிர்வாகத்துக்கு பணம் வழங்குகிறார்கள். அதுபோல் எங்கள் கல்லூரிக்கு சொந்தமான கிரிக்கெட் மைதானத்தையும் தனியாருக்கு வாடகைக்கு விடுகிறார்கள். அதன்மூலமும் பல லட்சம் வருவாய் வருகிறது. ஆனால், அந்த பணம் எல்லாம் எங்கே போகிறது என தெரியவில்லை. இவ்வளவு வருமானம் இருந்தும், விடுதி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் நிர்வாகம் அலட்சியமாக உள்ளது என மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment