FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, January 4, 2018

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

03.01.2018
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி இமாச்சல பிரதேச மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண் ஒருவரை ரஜ்னீஷ் (எ) விக்கி என்ற வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததில் அப்பெண் கர்ப்பமடைந்தார். இதன்மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹமீர்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ரஜ்னீஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.20,000 நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.30,000 நஷ்ட ஈட்டு தொகை வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து இமாச்சல பிரதேச அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், “பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் நஷ்டஈடு வழங்க எந்த திட்டமும் அரசிடம் இல்லை. பாதிக்கப்பட்டவர் இறந்தால் அல்லது உடல் உறுப்பு பாதிக்கப்பட்டால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வழங்குவதற்கு மட்டுமே மாநில அரசு திட்டத்தில் இடமுண்டு. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.சலமேஸ்வர், எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு முன்பாக இம்மனு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பாவிட்டாலும், பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீத பாதிப்புள்ள மாற்றுத்திறனாளி என்பதையும் அவர் ஒரு பெண் குழந்தையின் தாய் என்பதையும் மனதில் கொண்டு உத்தரவை மாற்றியமைக்க விரும்புகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இமாச்சல பிரதேச அரசு ரூ.15 லட்சம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இந்த தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வைப்பு நிதியாக செலுத்தி அதிலிருந்து கிடைக்கும் வட்டியை அவரது பெற்றோரிடம் வழங்க வேண்டும். அந்த வட்டித் தொகை பாதிக்கப்பட்ட பெண்ணின் நலனுக்காக செலவழிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment