FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, January 16, 2018

மேற்கு மண்டலத்தில் ஆடியோ வெர்பல் மையம்:கோவை அரசு மருத்துவமனையில் விரைவில் துவக்கம்

16.01.2018
கோவை;மேற்கு மண்டலத்தில், முதல் முறையாக, 'ஆடியோ வெர்பல்' பயிற்சி மையம், கோவை அரசு மருத்துவமனையில் துவங்கப்பட உள்ளது.பிறவியில் அல்லது இடையிலோ செவித்திறன் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் வாய் பேச முடியாது. இப்பிரச்னைக்கு 'காக்லியர் இம்ப்ளான்டேஷன்' எனும், நவீன அறுவை சிகிச்சை மூலம் தீர்வு வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சையில், காந்தம் போன்ற கருவி உட்செவியில், பொருத்தப்படும். தொடர்ந்து, மூன்று வாரங்களுக்குப் பின் காதுமடலில் வெளிப்புறக்கருவி பொருத்தப்படும். இக்கருவி ஒலியை கேட்க உதவும்.கருவி பொருத்தப்பட்ட ஓராண்டுக்கு பின், தீவிர ஒலி வழி பயிற்சி மூலம் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, ஆடியோ வெர்பல் தெரபி மையங்கள்(ஏ.வி.டி.,) உதவிகரமாக இருக்கின்றன. பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இந்த மையங்கள், மேற்கு மண்டலத்தில், வேறு அரசு மருத்துவமனைகளில் இல்லை. மேற்கு மண்டலத்தில், முதல் முறையாக கோவை அரசு மருத்துவமனையில் இம்மையம் விரைவில் துவங்கப்பட உள்ளது.கோவை அரசு மருத்துவமனையில், 2013ம் ஆண்டு முதல் இதுவரை, 185 குழந்தைகளுக்கு காக்லியர் இம்ப்ளான்டேஷன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னையிலேயே இதை விட, குறைந்த அறுவைசிகிச்சைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, இந்த ஏ.வி.டி., மையத்தை கோவையில் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில்,''காக்லியர் இம்ப்ளான்டேஷன் அறுவை சிகிச்சைக்கு பின் ஏ.வி.டி., மையங்களின் பணி முக்கியமானது.இதன் மூலமே குழந்தைகள் கேட்கும் சக்தி உணர்ந்து, ஒலியின் வடிவங்களை அறிந்து கொள்வர். இதற்காகவே இச்சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தனியார் பங்களிப்பில் குழந்தைகளுக்கு பயிற்சிக்கு வழங்கப்பட்டு வந்தது.இனி சிகிச்சை பெறுவோருக்கு பயிற்சிக்கு வெளி இடங்கள் செல்ல தேவையில்லை, விரைவில் மையம் செயல்பாட்டுக்கு வர உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment