FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, August 13, 2018

ஆபாசப் படம் பார்க்க கட்டாயப்படுத்தி 6 மாதங்களாக வன்புணர்ச்சி: போபால் காதுகேளாத வாய்பேசாத மாற்றுத்திறனாளி பெண் புகார்

12.08.2018, Bhopal,
பேச்சு, செவித்திறன் குறைபாடு உடைய இருபது வயது இளம்பெண் போபாலில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் இயக்குநர் மீது கடந்த வாரம் பாலியல் புகார் அளித்திருந்தார். இதற்கு இரு தினங்கள் கழித்து, மேலும் இரண்டு பெண்கள் இதேபோன்ற புகார்களை அளித்திருந்தனர். தற்போது நான்காவதாக மேலும் ஒரு பெண் இவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் "ஆறு மாதங்களாக என்னை அடைத்து வைத்து பல்வேறு சித்ரவதைகள் செய்தார். ஆபாசப் படங்களைப் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி, தொடர்ந்து வன்புணர்ந்தார். மறுத்தால் மோசமாகத் தாக்குவார்" என்று அதிர்ச்சி தரும் புகார்களை இந்தூர் காவல்துறையிடம் அடுக்கியுள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்றே கைது செய்யப்பட்ட விடுதி இயக்குநர் அஷ்வனி குமார் மீது வன்புணர்வு, மிரட்டல், சட்டவிரோதமாக அடைத்து வத்தல், தலித்துக்கு எதிரான வன்கொடுமை ஆகிய பிரிவுகள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தற்போது புகார் அளித்துள்ள 23 வயது பெண் மத்தியப் பிரேதசத்தின் தார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவருடன் சேர்த்து மொத்தம் நான்கு பெண்களை அவத்புரியின் கிரிஸ்டல் ஐடியல் சிட்டியில் உள்ள ஒரு தனி வீட்டில், தனியார் விடுதி இயக்குநரான அஷ்வினி குமார் அடைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இப்புகார் குறித்து, போபால் காவல்துறையின் மூத்த அதிகாரி தர்மேந்திரா கூறுகையில், "நான் இந்தூர் காவல்துறையுடன் தொடர்பில் உள்ளேன். புகார் மீது வழக்குப் பதிவு செய்து விவரங்களை மேல் விசாரணைக்காக போபால் காவல்துறைக்கு அனுப்புமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளேன்" என்றார்.

மேலும் மாநிலம் முழுவதும் பெண்கள் விடுதிகளில் மாதாந்திர சோதனைகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே காங்கிரஸ் கட்சி, "அண்மையில் பீகாரில் குழந்தைகளை வன்புணர்ந்து சித்திரவதை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜேஷ் தாகூர் என்னும் நபரைப் போலவே அஷ்வினி குமாரும் பாஜகவுடன் தொடர்புடையவர்" என்று குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷோபா ஆஸ், "கைது செய்யப்பட்ட அஷ்வினி குமார் ஒரு ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர். முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் ஆசி பெற்றவர்" என்று கூறினார். காங்கிரஸ் வெளியிட்ட வீடியோவில், அஷ்வினி குமார் முதல்வர் சிவராஷ் சிங் சவுகானோடு நெருக்கமாக நின்றிருப்பதாகவும் அவரின் பாதத்தைத் தொட்டு ஆசி பெறுவதாகவும் காட்சிகள் உள்ளன.

இதனை மறுத்த பாஜ செய்தித்தொடர்பாளர் ராகுல் கோத்தாரி, 'விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் காங்கிரஸ் தேவையின்றி ஒரு உணர்வுப்பூர்வமான விசயத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது' என்று தெரிவித்தார்.

ம.பி. காங்கிரஸ் தலைவர் கமல்நாத், இவ்வழக்கில் சிபிஐ விசாரணையை வலியுறுத்தி மாநில முதல்வர் சவுகானுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment