FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, August 28, 2018

வாய் பேச முடியாத, காது கேட்காத மகனை கொன்ற தந்தைக்கு 10 ஆண்டு சிறை

24.08.2018
திருப்பத்துார்: மகனை கொன்ற தந்தைக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வேலுார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த, தேவலாபுரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன், 45; கூலித் தொழிலாளி. இவர், மனைவி ஜெயலட்சுமி, 40, மகன் கார்த்தி, 20. இவர், வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி.
குடும்பத்தகராறால், கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், 2014, நவ., 2ல் போதையில் வீட்டுக்கு வந்த ஐயப்பன், கார்த்தியிடம் குடிக்க பணம் கேட்டார்.
அவர் மவுனமாக இருந்ததால், ஆத்திரமடைந்த ஐயப்பன், விறகு கட்டையால், அடித்துக் கொன்றார். உம்மராபாத் போலீசார், அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கு, திருப்பத்துார் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, மகனை கொன்ற ஐயப்பனுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment