13.08.2018
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளன.திருப்புத்துார் ட்ரூபா, நேஷனல் அகாடமி ஆப் இன்டஸ்டீரியல் நிறுவனங்கள் சார்பில் தையல் பயிற்சி அளிக்கப்படும். நிறுவனத்திற்கு 60 வீதம் 120 பேர் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 40 வயதுள்ள 5 ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியுற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம். காதுகேளாத, வாய்பேசாத நபர்கள், இரு கைகள் நல்ல நிலையில் ஒரு கால் மட்டும் பாதிக்கப்பட்டோர், மிதமான மனவளர்ச்சி குறையுடையோராக இருப்போர் விண்ணப்பிக்கலாம்.
திருப்புத்துார் நேஷனல் அகாடமி ஆப் இன்டஸ்டீரியல் நிறுவனம் சார்பில் குளிர்சாதன பெட்டி மற்றும் குளிர்சாதனம் பழுது நீக்க பயிற்சி, விருந்தோம்பல் உதவியாளர் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பயிற்சிக்கும் 20 பேர் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 40 வயதுள்ள 8 ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியுற்றோர் விண்ணப்பிக்கலாம். காதுகேளாத, வாய்பேசாதோர், இரு கைகள் நல்ல நிலையில் கால்கள் பாதிக்கப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பூவந்தி ராஸ் அகாடமி சார்பில் உதவி செவிலியர் பயிற்சி அளிக்கப்படும். நாற்பது பேர் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 40 வயதுள்ள 10 ம் வகுப்பு தேர்ச்சியுற்றோர் விண்ணப்பிக்கலாம். இரு கைகள் நல்ல நிலையில் ஒரு கால் பாதிக்கப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.விரும்புவோர் ஆக., 25 க்குள் ஸ்மார்ட் சிவகங்கா செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு 04575 242025 ல் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் லதா தெரிவித்தார்.
No comments:
Post a Comment