25.08.2018
புதுச்சேரி, உப்பளம் விளையாட்டு மைதானத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதுவே இவர்களுக்காக புதுச்சேரியில் நிகழ்த்தப்படும் முதல் போட்டியாகும்.
இதில், 16 முதல் 26 வயது உடையவர்களுக்கு பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நிகழ்த்தப்பட்டது.
இந்தப் போட்டியில், புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சார்ந்த 350க்கும் மேற்பட்ட மாற்று திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெற்ற வீரர்கள், வருகின்ற டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். மேலும், வெற்றி பெற்ற மாற்றுதிறனாளிகளுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment