FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, June 14, 2019

கல்விக்கு மகுடம்! கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்...


+2 தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. மாணவர்கள் கல்லூரி சேர்க்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வரும் நேரமிது. இந்நேரத்தில் வேலைவாய்ப்பை அளிக்கும் கல்லூரிக்கே மாணவர்களும் பெற்றோர்களும் முன்னுரிமை அளிப்பதைப் பார்க்கமுடியும். கேம்பஸ் இன்டர்வியூ, எனப்படும் வளாக நேர்காணலில், அதிக நிறுவனங்களை ஈர்க்கும் கல்லூரிகளில் சேரவே மாணவர்கள் விரும்புவர். அந்தவகையில் விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோயில் பகுதியில் 400 ஏக்கரில் பரந்து விரிந்து அமையப்பெற்றுள்ள கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மாணவர்களின் விருப்பத் தேர்வாக திகழ்ந்துவருகிறது.

ஒரு லட்சத்து இரண்டாயிரம் சதுர அடி பரப்பளவில், ஒரே சமயத்தில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து படிக்கும் படிப்பறை, கணினி மயமாக்கப்பட்ட புத்தகங்களின் குறிப்புக்கள், வீடியோ கான்ஃபரன்ஸ் ஹால், 90,000 புத்தகங்கள், 40 லட்சத்துக்கும் மேலான மின் புத்தகங்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட பல்வேறு பருவ இதழ்கள் அடங்கிய, 1000 மாணவர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்கக்கூடிய அளவு பிரம்மாண்டமான முற்றிலும் குளிரூட்டப்பட்ட நூலகம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. உயர்தர கேன்டீன்கள், 2000 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே கான்ஃபரன்ஸ் மற்றும் செமினார் ஹால், ஒலிம்பிக் தரத்தில் விளையாட்டுத் திடல்கள், மாணவ, மாணவியருக்குத் தனித்தனியே ஜிம்கள், பல்கலை வளாகத்தில் 24 மணிநேர வைஃபை வசதியும் உண்டு.

வேலைவாய்ப்பில் ஜொலிப்பு...

அனைத்து மாணவர்களுக்கும் ஆளுமை மேம்பாடு (Personality Development) பயிற்சி, வேலைவாய்ப்புக்கான சாப்ட் ஸ்கில் பயிற்சி, வினாடிவினா, கணிதத் திறன் பயிற்சி ஆகியவை கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலிருந்து வழங்கப்படுகின்றன. கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலை. பாடத்தோடு சேர்ந்து நடத்தப்படும் இந்தப் பயிற்சிகளுக்கு, மதிப்பெண்களும் உண்டு. இதனால் மாணவர்கள் பணிச்சூழலுக்கு ஏற்ற ஆளுமையைப் பெறமுடிகிறது. முதலாம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு பயிற்சியும் வழங்கப்படுவதால், புகழ்பெற்ற நிறுவனங்களிலிருந்து கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஒரு நபர் 2 ஆணைகள் வரை பெறமுடிகிறது.

கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், 2018-19 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 101 கம்பெனிகள் வருகைதந்து, இதுவரை 1600 மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளார்கள், இவர்களுக்குத் தொடக்கச் சம்பளம் ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் ஆகும். இதில் பைஜூஸ் கம்பெனி மூலம் தேர்ந்தெடுக்கப்பபட்டுள்ள மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்கும்பொழுதே 320+ மாணவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கான (Internship) ஆணை கிடைத்துள்ளது. மேலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பிரத்தியேக வேலைவாய்ப்புக் குழுவின் உதவியுடன் புகழ்பெற்ற நிறுவனங்களில், பயிற்சியும், வேலைவாய்ப்பும் உறுதிசெய்யப்படுகிறது.

இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறந்த பொறியியல் வல்லுனர்களையும், மேலாளர்களையும் உருவாக்கியுள்ளது கலசலிங்கம். இவர்கள் யாவரும் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் சிறப்பான பணிகளிலும், சொந்தத் தொழிலிலும் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

கோர்ஸ்கள்...


இங்கு மின்னியல், மின்னணு, பயோடெக்னாலஜி, பயோ மெடிக்கல், ஏரோநாடிக்கல், கெமிக்கல், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலெக்டிரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, கேட்டரிங், அக்ரிகல்சர், ஆர்க்கிடெக்சர் உள்ளிட்ட பிரிவுகளுடன், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பிஏ., பி.சிஏ., போன்ற இளங்கலைப் பிரிவுகளும், எம்.காம்., எம். எஸ்ஸி ., எம்.பிஏ, எம்,ஃபில்., எம்.டெக்., போன்ற முதுநிலைப் பிரிவுகளும், பி. ஹெச்டி முனைவர் பட்டப் பிரிவு மற்றும் பி. வோக் என்ற மூன்று வருட புதிய படிப்புடன், மொத்தம் 64 பாடப்பிரிவுகள் உள்ளன.

புதிய பாடப்பிரிவுகளாக ஃபோரின்சிக் சயின்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் இந்த ஆண்டு முதல் துவங்கப்படவுள்ளன. மேலும் வாய்பேசாத, காதுகேளாத மாணவர்களுக்காக, பி டெக் துறையில் சி எஸ் சி மற்றும் மெக்கானிக்கல் என இரண்டு புதிய பிரிவுகள், இந்தியாவிலேயே முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான பி.காம் படிப்பும் இந்தாண்டு முதல் துவங்கப்படவுள்ளது.

தன்னிகர் அற்ற தரம்...


NAAC-இன் 'A' கிரேடு அந்தஸ்து பெற்றுள்ள கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், 4 புள்ளிகளுக்கு, 3.11 CGPAவைக் கொண்டுள்ளது. Careers 360° நிறுவனம், இந்தியாவின் உயரிய கல்வி நிறுவங்களில் ஒன்றாக AAAA ரேங்கிங்கை கலசலிங்கத்துக்கு வழங்கியுள்ளது. தேசிய மனிதவள அமைச்சகத்தின் தரவரிசைப்படி, இந்திய அளவில் உயர்கல்வி படிப்பதற்கான சிறந்த கல்வி நிறுவனங்களில் 7வது இடத்தைப் பிடித்துள்ளதோடு, அதே அமைச்சகத்தின் NIRF பிரிவின் இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கான தரவரிசையில் தேசிய அளவில் 61 வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், QS-IGAUGE நிறுவனத்தின் தரவரிசையில், உயர்வான 'டைமண்ட்' ரேட்டிங் பெற்றுள்ளது.

கலசலிங்கம் பல்கலையின் ECE, EEE, சிவில், பயோடெக், கம்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளுக்கு, 6 வருடங்களாக NBA Washington Accord எனும் மிக உயரிய சர்வதேச தரச்சான்றிதழ் கிடைத்திருப்பது மிகப்பெரும் சாதனையாகும்.

மாணவர்களுக்கு கட்டணச்சலுகை மற்றும் உதவித்தொகை...


ஸ்டேட் போர்டு மாணவர்கள் 95% மதிப்பெண்கள் எடுத்திருந்தால் 50%ம், 90% எடுத்தால் 25%ம், 85% எடுத்தவர்களும் 10%ம் கல்விக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. சி. பி. எஸ். இ மாணவர்களுள், 85% மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு 50%ம், 80% எடுத்தவர்களுக்கு 25%ம், 75% எடுத்தவர்களுக்கு 10%ம் கல்விக்கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. JEE, NEET மற்றும் KEEE எக்ஸாம் பிரிவுகளுக்கும் ஸ்காலர்ஷிப் உண்டு. மேலும், என்ஜினியரிங் படிக்கும் போது படிப்பில் முதல் மூன்று இடங்கள் பெறும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விளையாட்டுத்துறையில் மாநில & தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்குச் சிறப்பு உதவித்தொகையும் உண்டு. ஒவ்வொரு வருடமும் சுமார் 5 கோடி ரூபாய்க்கும் மேலான கல்வி உதவித்தொகையை பல்கலை நிர்வாகம் மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.

பாடங்களையும், அதைக்கற்பிக்கும் ஆசிரியர்களையும் தங்களின் விருப்பமுறையில் தேர்ந்தெடுக்கும் CBCS கல்வி முறை முழுவதுமாக நடைபெற்றுவருகிறது. மேலும் தொழிற்சாலை நிபுணர்கள், தெழிற்சாலைகளில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள், வருகைதந்து அப்போதைய தொழிற்நுட்ப வளர்ச்சிகளில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து தேர்வு நடத்தும் “1” கிரெடிட்' பாடத்திட்ட நடைமுறை மாணவர்களைக் கவர்ந்துள்ளது. மாணவர்கள் வெளிநாடு சென்று படித்து வருவதற்கென 35 அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும், அயல்நாட்டு வல்லுநர்கள் வருகை தந்து அங்குள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்கள். பிற நாட்டு மாணவர்கள் ஒரு பருவம் இங்கே வந்து படிப்பதாலும், ஜெர்மன், ஃபிரெஞ்சு, ஜப்பான், கொரியா மொழிகள் கற்பிக்கப்படுவதாலும் மாணவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று கல்வி கற்கும் அனுபவத்தை பெறுகின்றனர்.

தொழில்வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம்!

கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மத்திய அறிவியல் தொழில்நுட்பக்கழகத்தின் உதவியுடன் புதிய கண்டுபிடிப்புகளை சுயதொழிலாக வளர்த்தெடுக்கும் மையம் ஒன்றும், சுயதொழில் தொடங்குவதற்கு விதையாக துவக்க நிதி வழங்கும் மையமும் இயங்கி வருகின்றன. இந்த மையங்களின் மூலம் மாணவர்களுடைய 20 புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, அதைச் சுய தொழிலாக மாற்ற ரூ. 90 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள மாணவர்களுக்கும் சுற்றுப்புற கிராம மக்களுக்கும் குறுந்தொழில் வளர்ச்சிக்காகவும் புதிய தொழில் துவங்குவதற்காகவும், ஒவ்வொரு திட்டத்திற்கும் ரூபாய் 6. 25 லட்சம் வீதம், மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் வளர்ச்சி மையத்தின் சார்பில் பல்கலைக்கழக சுயதொழில் முனைவோர் மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழிலோடு நிற்காமல் தொடர்ந்து மாணவர்கள் சமூக சேவையில் ஈடுபடவேண்டும் என்பதற்காக 2015ம் ஆண்டிலிருந்து மூன்றாமாண்டு பி. டெக் மாணவர்களுக்கான சமூக சேவை (புராஜெக்ட்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் மூலம் சிறிய அளவிலான குடிசைத்தொழில்கள், மருத்துவமனை மற்றும் பள்ளிகள் நன்மை அடைகின்றன.

தங்கும் விடுதி & ஓட்டுநர் பயிற்சி...

ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு தனித்தனியே, மொத்தம் 6 விடுதிகள் செயல்பட்டுவருகின்றன. வீடு போன்ற சூழ்நிலை கொண்ட இந்த விடுதிகளில் தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவு இரண்டும் தனித்தனியே தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. 2 மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களுடன் 20 படுக்கைகள் கொண்ட 24 மணிநேர மருத்துவ மையம் இங்கு செயல்பட்டுவருகிறது. மாணவ மாணவியருக்கு கார் டிரைவிங் பயிற்சி மற்றும் லைசென்ஸ் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இங்கு பலதரப்பட்ட மாணவர்களும் நாடு முழுவதிலிருந்தும் வந்து படிப்பதால் மாணவர்களுக்கு சிறந்த கலாச்சார அனுபவமும் பன்மொழித்திறனும் கிடைக்கப்பெறுகின்றன. கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பயில்வதால், மாணவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்வாய்ப்பு பெற்று வாழ்வில் ஒளிரலாம்.

No comments:

Post a Comment