FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Sunday, June 23, 2019

பிறவிலேயே காதுகேளாத, பேச்சு திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ‘‘காக்ளியர் இம்ப்ளாண்ட்’’ அறுவை சிகிச்சை


விழுப்புரம், ஜூன் 22–
பிறவிலேயே காது கேளாத, பேச்சு திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அதி நவீன காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் துவக்கப்பட்டது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்எம்ஓ கதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . காது , மூக்கு, தொண்டைபிரிவு துறை தலைவர் இளஞ்செழியன் வரவேற்றார் . பிறவிலேயே காது கேட்காமல், பேச்சுத்திறன் குறைபாடு இல்லாமல் இருக்கும் குழந்தைளுக்கு கேட்கும், பேசும் திறன் மேம்படுத்தும், அதிநவீன காக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சையை மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி கட்டளையின் இயக்குனர் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் , மெட்ராஸ் மருத்துவ கல்லுாரி இஎன்டி பிரிவு இயக்குனர் முத்துகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஆப்ரேஷன் தியேட்டரில் நடந்த அறுவை சிகிச்சையை வீடியோ கான்பிரன்சிங் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்து, அறுவை சிகிச்சை பற்றிய டாக்டரின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். இந்த அறுவை சிகிச்சை செய்ய ரூ. 7 லட்சம் வரை செலவாகும். தற்போது அரசு மருத்துவ காப்பீடு மூலம் இலவசமாக செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட இணை இயக்குனர் சுகந்தி, துணை இயக்குனர் பாலுச்சாமி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லுாரி இஎன்டி பிரிவு துறை தலைவர் இந்திரா, டாக்டர்கள் வெற்றிவேல், சவுந்திரராஜன், துறை டாக்டர்கள் ரவிக்குமார், விஜயபாபு, ஸ்ரீராம், நிஷாத், சையது அபுதாஹீர் , நிர்வாக அலுவலர்கள் கவிஞர் சிங்காரம் , ஆனந்த ஜோதி மற்றும் விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணி புரியும் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment