21.06.2019
சேலம்: பல்வேறு பதக்கங்களை குவித்த மாற்றுத் திறனாளி பெண், வறுமையால், சர்வதேச போட்டிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, சித்தர்கோவில் பொன்னகரைச் சேர்ந்தவர் சூர்யா, 25; வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத, மாற்றுத் திறனாளி பெண். வறுமை காரணமாக, பி.காம்., படிப்பை, பாதியில் நிறுத்தி விட்டார். இவருக்கு, கடந்த ஆண்டு திருமணமாகி, சேகர், 30, என்ற கணவர் உள்ளார். இருவரும், வெள்ளி கூலி தொழில் செய்து வருகின்றனர். சூர்யா, சிறுவயதிலிருந்தே தடகளம் விளையாட்டில், ஆர்வம் செலுத்தி வந்துள்ளார்.
மாநில, தேசிய அளவில் பல்வேறு தங்கம், வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளார். முறையான பயிற்சி மற்றும் பண உதவி செய்தால், சர்வதேச அளவிலான போட்டிக்கு செல்லும் வாய்ப்புள்ளது.கடந்த, 2017ல் திருநெல்வேலியில், மாநில கைப்பந்து போட்டியில் தங்கம், 2017ல், மாநில தடகள போட்டியில், 800 மீ., ஓட்டத்தில் தங்கம், வட்டெறிதலில் வெண்கலம், 2018ல், கோவையில் நடந்த மாநில ஈட்டி எறிதலில் தங்கம், 2019ல் சென்னையில் நடந்த, 23வது தேசிய கைப்பந்து போட்டியில் வெண்கலம், கோலம், அழகி போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
பதக்கங்களை குவித்து சாதனை படைத்தாலும், போட்டி நடக்கும் பகுதிகளுக்கு செல்ல, பணம் இல்லாமல், கூலி வேலைக்கு செல்கிறார். இவருக்கு உதவ முன்வருவோர், 97891 - 81105, 86674 - 63687 என்ற எண்களில் அழைக்கலாம்.
No comments:
Post a Comment