FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, June 25, 2019

பிறந்தது முதலே காது கேளாத குழந்தைகளுக்கு ஜிெஹச்சில் சூப்பர் சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அசத்தல்

மதுரை, ஜூன் 25: பேச்சு மற்றும் கேட்கும் திறன்களை இழந்து பிறக்கும் குழந்தைகளை 6 வயதிற்குள், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தால் இலவசமாக அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணப்படும் என, மதுரை அரசு மருத்துவமனை ெதரிவித்துள்ளது. இந்திய அளவில் நடந்த ஒரு ஆய்வில், பிறக்கும் குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் சிறு சிறு குறைபாடுகள் முதல், சரி செய்ய முடியாத குறைபாடுகள் உள்ளவர்களாக (மாற்றுத் திறனாளிகளாக) பிறக்கின்றனர். இப்படி மாற்றுத் திறனாளிகளாக பிறக்கும் குழந்தைகளில், காதும் கேளாமல், வாயும் பேசமுடியாமல் பிறக்கும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் உள்ளனர். இவர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் வைத்தியமே இல்லாத நிலை இருந்தது. பல பெற்றோர் சாபக்கேடு என்று நினைத்து அக்குழந்தையை வீட்டிலேயே சிறை வைத்து விடுவர். 

ஆனால் தற்ேபாது விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. அரிய வகை, அறுவை சிகிச்சையின் போது, சிகிச்சை மேற்கொள்பவரின் இதய ஓட்டத்தை சில மணித்துளிகள் நிறுத்தி, செயற்கை இதய ஓட்டம் மூலம் அறுவை சிகிச்சை முடிந்ததும், மீண்டும் இதயத்தை இயற்கையாக செயல்பட வைக்க முடிகிறது. அந்த அளவிற்கு மருத்துவம் வளர்ச்சியடைந்துள்ளது. இதில் ஒன்றுதான், கேட்கும் மற்றும் பேசும் திறன்களை இழந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, நவீன அறுவை சிகிச்சை மூலம் காதுகேட்கும் திறனை செயற்கையாக பெற வைப்பது. மதுரை அரசு மருத்துவமனையில் பிறவியிலேயே முற்றிலும் காது கேளாத, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக `காக்ளியர் இம்ப்ளான்ட்’ (நுண் செவி கருவி) என்ற நவீன காதொலி கருவி இலவசமாக பொருத்தப்படுகிறது. இதுவரை ஏராளமான குழந்தைகளுக்கு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை அறுவை சிசிச்சை துறை தலைவர் டாக்டர் தினகரன் கூறுகையில், ``செயற்கை காதொலி கருவி பொருத்தும் சிகிச்சைக்காக, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, குழந்தைகளை கூட்டி வருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. இச்சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் முதல் 6.50 லட்சம் வரை செலவாகும், ஆனால் மதுரை அரசு மருத்துவமனையில் இலவசமாக இக்காதொலி கருவி பொருத்தப்படுகிறது. 6 வயதிற்கு உட்பட்ட பிறவியிலேயே காதுகேளாத குழந்தைகளின் பெற்றோர், அரசின் காப்பீட்டு திட்ட அட்டையுடன் வந்து இந்த சிகிச்சையை இலவசமாக பெறலாம்’’ என்றார்.

No comments:

Post a Comment