30.06.2020
மானூர்,
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 43). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மேலும் இவர் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார். இந்த நிலையில் நேற்று மதியம் தனது மொபட்டில் அருகில் உள்ள ரெட்டியார்பட்டிக்கு சென்று விட்டு உக்கிரன்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக கழுகுமலையை சேர்ந்த கணேசன் (60) என்பவர் ஓட்டி வந்த லாரியும், அவரது மொபட்டும் மோதிக் கொண்டன. இதில் கிறிஸ்டோபர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கிறிஸ்டோபரின் சகோதரி மெர்லின் (40), மானூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இறந்து போன கிறிஸ்டோபருக்கு அபிதா (40) என்ற மனைவியும், மேபல் (6) என்ற மகனும் உள்ளனர். இதில் அபிதாவும் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment