FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, July 5, 2020

`எதிர்பார்க்கல...வேலை கிடைச்சிருச்சு!' -மாற்றுத் திறனாளிகள் குடும்பத்துக்கு உதவிய அமைச்சர்


``விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியை முழுமையாகப் படித்தேன். கடைசி வரியில், தூய்மைப் பணியாளர் வேலை கொடுத்தால்கூட போதும் என்று அந்தப் பெண் கூறியிருந்தார்" -நகராட்சி ஆணையர்.

புதுக்கோட்டை காந்தி நகரில் வசிக்கும் ராஜூ - வசந்தா தம்பதிக்கு 5 மகள்கள், 2 மகன்கள் என மொத்தம் 7 பிள்ளைகள். இதில், 4 பெண்கள், 2 ஆண்கள் என 6 பேர் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். கடைக்குட்டி பெண்ணான தனலட்சுமி மட்டும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் பிறந்துவிட்டார்.

பல வருடங்களாகவே செருப்பு தைத்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்த ராஜூ, தண்டுவட பாதிப்பால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் முடங்கிவிட்டார். அதன்பின்பு, வீட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றிவந்த வசந்தாவும் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே முடங்கவே, படிப்பைப் பாதியில் நிறுத்திய கடைக்குட்டி தனலட்சுமி, அம்மா செய்துவந்த வேலையான வீட்டு வேலையைச் செய்து தனது அப்பா அம்மாவுடன், மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளையும் காப்பாற்றிவந்தார். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் தனலட்சுமிக்கு வீட்டு வேலை கிடைக்கவில்லை.

அதனால், அந்தக் குடும்பம் சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், அரசு நிவாரணம் கொடுக்கவில்லை என்றாலும், கழிவறை கழுவும் வேலையாக இருந்தாலும், ஒரு வேலையை அரசு ஏற்பாடு செய்து கொடுத்தால் குடும்பத்தை மீட்டுக்கொண்டு வந்துவிடுவேன் என்று கூறினார். இதுபற்றி ஜூன் 27-ம் தேதி, "9 பேரில் 6 பேர் மாற்றுத்திறனாளிகள்!' -கொரோனா ஊரடங்கால் பரிதவிக்கும் குடும்பம்" என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் விரிவாக செய்தியைப் பதிவு செய்திருந்தோம்.

இதைப் பார்த்த நகராட்சி ஆணையர் சுப்ரமணியன், உடனே அதிகாரிகளை அனுப்பிவைத்து, அந்தக் குடும்பம் குறித்த விவரங்களைத் திரட்டினார். இதுகுறித்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கவனத்துக்குக் கொண்டுசென்ற ஆணையர், அவரிடம் அந்தக் குடும்பத்தின் நிலை குறித்துக் கூறியுள்ளார். உடனே, அந்தப் பெண்ணுக்கு தூய்மைப்பணியாளர் வேலையைக் கொடுக்க அமைச்சர் பரிந்துரைசெய்தார். தற்போது, தனலட்சுமி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலையைத் தொடங்கிவிட்டார்.

தனலட்சுமியிடம் பேசினோம், " மூணு இடத்துல வீட்டு வேலை செஞ்சு குடும்பத்தைக் காப்பாத்திட்டு இருந்தேன். ஊரடங்கு வந்ததாலதான் வீட்டு வேலைக்கும் போக முடியாம ரொம்பவே கஷ்டப்பட்டுட்டு இருந்தேன். சாப்பாட்டுக்கும் வழியில்லை. அந்த நேரத்தில், தெரிஞ்ச அண்ணன் ஒருத்தரு, அம்மா உணவகத்தின் மூலம் கொஞ்சநாள் சாப்பாடு கிடைக்க வழி செஞ்சாரு. தூய்மைப் பணியாளர் வேலை கிடைச்சா போதும் என்றுதான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். நான் எதிர்பார்க்கவே இல்லை, வேலை கிடைச்சிருச்சு. நல்லா வேலைபார்த்து இந்த வேலையை கெட்டியா பிடிச்சிக்குவேன். என்னுடைய வேலைக்காக விகடன் செஞ்ச இந்த உதவியை எங்க காலம் உள்ள வரைக்கும் மறக்க மாட்டோம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

நகராட்சி ஆணையர் சுப்ரமணியனிடம் பேசினோம். " விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியை முழுமையாகப் படித்தேன். கடைசி வரியில், தூய்மைப் பணியாளர் வேலை கொடுத்தால்கூட போதும் என்று அந்தப் பெண் கூறியிருந்தார். தனலட்சுமியைப் போன்றவர்கள், கண்டிப்பாக மக்களுக்காக உழைப்பார்கள் என்று முடிவுசெய்துதான் அமைச்சருக்குத் தகவல் கொடுத்தேன். அவரும் பார்த்துவிட்டு, உடனே பணி கொடுக்க உத்தரவிட்டார். நகராட்சியில் தற்போது தற்காலிக தூய்மைப்பணியாளர் வேலை கொடுத்துள்ளோம். விரைவில் நிரந்தர தூய்மைப் பணியாளராக்கிவிடுவோம்" என்கிறார் உறுதியான குரலில்.

No comments:

Post a Comment